எல்லா தந்தையருக்கும் தந்தை தின வாழ்த்துக்கள்.
உலகத்தில் விலை மதிக்க முடியாத உறவு என்பது, தாய், அடுத்து தந்தை.
என் தந்தையை பற்றி உங்களோடு கொஞ்சம்.
என சின்ன வயதில் எனக்கு நினைவு இருந்தவை மட்டும்.
என் தந்தை இன்று வரைக்கும் அன்போடு, பாசத்தோடு பேசுவைத் நினைக்கும் போது என்னால மற்க்க்வே முடியல்லை.
இன்றைக்கும் எனக்கு உடம்பு சரியில்லை என்றாலும் உடனே போன் செய்து சரியாகும் வரை நலம் விசாரிப்பதும் இது சாப்பிடு அதை சாப்பிடாதே நல்ல ரெஸ்ட் எடு வீணா கவலை படாமல் நல்ல எதையும் எதிர்த்து போராட கற்று கொடுத்தது என் தந்தை, எந்த காலகட்டத்திலும் துணிந்து சமாளிக்கவும் நல்ல போஷாக்கு என் தந்தை தான்.
இன்றும் பிறந்த நாளைக்கும் அவர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு கோயிலில் போய் அர்ச்சனை செய்து வீட்டில் விருந்து வைத்து அக்கம் பக்கம் இருக்கிற குழந்தைகளுக்கு குடுப்பது இன்றும் வழக்கம்.
அப்பா எனக்கு நான் எது விரும்பி கேட்டாலும் முடிந்தவரைக்கும் கிடைக்கிற பொருள் என்றால் உடனே எங்கிருந்தாவது வாங்கி குடுப்பாங்க.
என்னால் இன்று அவர்கள் பக்கத்தில் இருக்க முடியவில்லை என்கிற மனவருத்தம் இருந்து கொண்டே இருக்கு.
இன்றும் யாராவது இந்தியாவில் இருந்து யார் வந்தாலும் எனக்கு மறக்காமல் எனக்கு பிடித்த பொருளை குடுத்தனுப்புவாங்க. அங்கு ஏதாவது விசேஷம் என்றாலும் என்னால் கலந்துக்க முடியவில்லை என்றால் உடனே வெப் கேமரா வழி எனக்கு கலந்துகொள்ள வைப்பார்.
இப்போ அப்பாவுக்கு கொஞ்சம் வயதாகிவிட்டாதால் இன்றும் காலை+மாலை நடப்பது உடம்பை நல்ல டயட்டா வைத்திருப்பதும் வீட்டுக்கு யார் வந்தாலும் அன்போடு உபசரித்து
அவசியம் உணவருந்திவிட்டு தான் மறுவேலை எங்க வீட்டிற்க்கு யார் வந்து போனாலும் விஜி உங்க பேரன்ஸை பார்க்காவது அவசியம் நாங்க போகனும் என்று சொல்வார்கள்.
நானும் எங்க அப்பாவுக்கு பிடித்தை மற்க்காமல் வாங்கி குடுப்பதும் அதே போல் நானும்
அவர்களை நினைப்போடும், அடுத்த ஜென்மத்திலும் இதே அப்பா, அம்மாவை பெற வேண்டும் என்று கடவுளை வேண்டி கொள்கிறேன்.
அன்னையர் தின வாழ்த்துக்கள்.
என் மகளுகளும் அவங்க அப்பாவுக்கு நல்ல அழகான கார்ட் குடுத்தாங்க இன்று என் மக தன் தந்தையருக்கு ப்ரேக்பாஸ்ட் செய்து குடுத்தா.
3 comments:
சூப்பர் கார்ட்
வாழ்க வளமுடன்
தந்தையர் தின வாழ்த்துக்கள்
விஜி, Cards எல்லாம் அழகு. எங்கள் வீட்டிலும் இப்படியே கொடுக்கப்பட்டது, ஒளித்துச் செய்து, ஒளித்து வைத்திருந்து, காலையில் பெரிய புதையல் எடுப்பதுபோல எடுத்துக் கொடுக்கப்பட்டது.... அது விலைமதிப்பற்றதுதானே.
தந்தையர்தின வாழ்த்துக்கள்.
Post a Comment