வீட்டிலேயே லைப்ரரி
புஸ்தகங்கள் நிறய்ய படிப்பவர்களுக்கும், வீட்டில் நிறய்ய புஸ்தகங்கள் இருந்தும் அதை அவசரத்திற்க்கு எடுப்பதற்க்கு அவதிபடுகிறவர்களுக்கும் இதோ இதே போல் இருந்தால் நாம் எடுப்பதற்க்கும், நம் அவசரத்திற்க்கு உடனே தீர்வு கிடைத்திடும்,
சிலர் வீட்டில் புத்தகங்கள் நிறய்ய வைத்திருப்பார்கள்.
அதை அழகாக லேபல், கூடை, ட்ரே போன்றவற்றில்
அடுக்கி வைக்கலாம்.
நிங்களும் இதே போல் செய்தால் புத்தகங்கள் அங்கும் இங்குமாக
நிங்களும் இதே போல் செய்தால் புத்தகங்கள் அங்கும் இங்குமாக
கிடக்காமல் எல்லா புத்தகங்களும் ஒரே இடத்தில் இருக்கவும் செய்யும்.
அவரவர் வசதிகேற்ப்ப ஒரு அலமாரி, ஷெல்ப், ப்ளாஸ்டிக், மரம்
ஏதுவானலும்அதில் சின்ன ப்ளாஸ்டிக் ட்ரே அல்லது கூடை,
இதில் ஏதாவது ஒன்றை விருப்பதிற்க்கும்,வசதிக்கும் தகுந்தாற்போல் வாங்கி அதில் மார்க்கர், அல்லது பேனாவினாலோ வேண்டிய தலைப்புகள், முடிந்தால் சில புத்தகங்கள் தொடர் புத்தகங்களாக இருக்கும் இருந்தால் அதன் வரிசை படி 1 முதல் 8 வரை என்று எழுதி அதன் படி அடுக்கி வைத்தால் பார்க்கவும், படிக்கவும் வசதியாகவும் இருக்கும்.
குழந்தைகள் புத்தகங்கள்,
ஸ்கூல் ஹோம் வொர்க் புத்தகங்கள்
பெரியவர்கள் படிக்கும் புத்தகங்கள்
வாரா,மாத இதழ்கள்,
இப்படி அவரவர் வீட்டில் இருக்கும் புத்தகங்களை ஒழுங்கு முறையில் அடுக்கினால் எல்லாருக்கும் வசதியாக இருக்கும்.
இடம் இருந்தால் அந்த இடத்திலேயே உட்கார்ந்து படிக்க ஒரு சின்ன சேர்
இருந்தால் எடுத்து படித்து அங்கே மறக்காமல் எடுத்த இடத்திலே திரும்ப வைக்கவேண்டும் ( அது தான் இதில் கவனிக்க வேண்டியது) மாற்றி வைக்ககூடாது.
முடிந்தால் நிங்க படித்து முடித்த உங்களுக்கு தேவையில்லை என்றால் அதை லைப்ரரரிலே குடுக்கலாம் அல்லது பள்ளியில் கூட கேட்டு குடுக்கலாம்.மற்றவர்களும் அதை பயன்படுத்துவார்கள்.
இந்த முறை எல்லோருக்கும் பயன்படும்.
13 comments:
looking very neat!
ம்...நல்ல யோசனை தான். ஆனால் இந்த வால் பசங்க படிச்சிட்டு மறுபடி ஒழுங்கா அதே இடத்தில் வைக்கணுமே....!!?
விஜி இது உங்கள் வீட்டு லைப்ரரியா?நல்ல டிப்ச் கொடுத்து இருக்கீங்க.
விஜி எங்க வீட்டிலும் நிறைய புத்தகங்கள் இருக்கு நீங்கள் அடுக்கி வைத்து இருப்பதை பார்த்தால் பீரோவில் இருக்கும் துணிய எல்லாம் தூக்கி போட்டு விட்டு இது போல் அடுக்கி வைக்காலாம் போல இருக்கு
அருமையான ஐடியா
நல்ல டிப்ஸ்!! உங்க வீட்டு லைப்ரரி ரொம்ப அழகா இருக்கு விஜி!!
நல்ல யோசனை... நன்றி விஜி
நல்ல ஐடியா ஆனா அதே போல திரும்பவும்ன் அதே இடத்தில வைக்கும் பழக்கமும் இருந்தால் நல்லது..!!
உங்களுடைய பதிவுகள் ரொம்பவும் நல்லா இருக்கு. தனி தமிழ் நாடு குறித்து உங்கள் கருத்துக்களும் ஆலோசனைகளும் வரவேற்கபடுகிறது. நன்றி தோழரே.
நன்றி வானதி.
முதல்ல கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும் போக போக இந்த முறை கண்டிப்பா வொர்க் ஆகும். கௌசல்யா.
ஆமாங்க ஸாதிகா, மேனகா. நன்றி.
ஜலீ கண்டிப்பா நிறய்ய புத்தகங்கள் இருந்தால் இந்தா மாதிரி வைக்கலாம்.
ஜெய் கரெக்டா சொன்னிங்க. எங்க வீட்டில் மெயில்ஸ் நிறய்ய வந்து சேர்ந்துடும் அதற்க்கு ஒரு வழியா அதை சரிபடுத்தி வைத்தாச்சு. விரைவில் அதை எப்படி வைக்கலாம் என்று படங்களோட போடுகிறேன்.
சிநேகிதி எப்படி இருக்கிங்க. நன்றி.
புதிய தென்றல் நன்றி.
Post a Comment