என் வலையுலக நட்பு உள்ளங்களுக்கும் என் நன்றி.உங்க எல்லார் பிரார்தனயும் தான் எனக்கும் என் குடும்பத்துக்கும்
என் அம்மாவிற்கும் மன ஆறுதலாக இருக்கு. என் எல்லா நண்பர்களும் போனிலும், ஈமெயிலும் ஆறுதல்கள் தெரிவித்த
எல்லாருக்கும் நன்றி.
என் அப்பாவின் திடீர் இழப்பு (ஹார்ட் அட்டாக்) முன் தினம் என்னோடு தமிழ் புத்தாண்டுக்கு போனில் பேசினார்
அடுத்த நாள் காலை என் வீட்டில் இந்த செய்தி வந்ததும் என்னால் நம்ப முடியவில்லை.
என் அப்பாவின் பிரிவு தாங்க முடியவில்லை இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு வருகிரேன்.
அப்பாவின் பிரிவால் என் அம்மா தான் இப்ப தனியாகவும் அதை நினைத்து வருத்த பட்டுகொன்டீருக்கிரீரார்கள்.
என் எல்லா உடன்பிறதவர்களும் சென்னையில் இருப்பதால் மேலும் அம்மா மட்டும் கேரளாவில் தானியாக
இருப்பதை நினைத்து எனக்கு மிகுந்த கவலையும் சங்கடமும் மனதுக்கு சங்கடம் இருந்து கொண்டே இருக்கு.
அப்பா நல்ல ஹெல்தியானவரும் அதே சமயம் எந்த ஒரு நோயும் இல்லை. மதியம் 2 மணிக்கு நெஞ்சு வலி
என்று அம்மாவிடம் சொல்லி உடனே அம்மா தண்ணீர் குடுத்ததும் நான் படுத்து கொண்டே டி வி பார்கிறேன்
என்று சொல்லி படுத்துவிட்டார் அவளவு தான் எல்லாமே முடிந்து விட்டது. அப்பா இப்போதும் எப்போதும்
எங்க கூட இருந்து எங்களுக்கு ஆசிர்வாததிபார் என்று நினைத்து நானும் மீண்டும் உங்க எல்லோரையம்
சந்திக்கிறேன்.
11 comments:
Viji, no amount of consolation can make you feel even close to free. Very sorry for this shocking loss. Take care!
மனதை தேற்றி கொள்ளுங்கள் விஜி.என்ன சொல்லன்னு தெரியலை.
காலம் தான் மனப்புண்ணை ஆற்றும் விஜி.உங்கள் தந்தயாரின் இறப்பை நேரில் நீங்கள் உணர்வுப்பூர்வமாக விவரித்ததை எங்கள் குடும்பமே கேட்டுக்கொண்டு இருந்து விட்டு மனம் கலங்கினோம்.அத்தகைய சூழ்நிலையிலும் எங்களை எல்லாம் வந்து பார்த்து விட்டு சென்றது எங்களால் மறக்கமுடியாத தருணம் விஜி.
ஆஆஆ விஜி, நான் இப்போதான் அறிகிறேன்.
என்ன செய்வது விஜி, அம்மாவுக்கு ஆறுதல் சொல்லுங்கள், மனதை தேற்றுங்கள்.
அவரின் ஆத்ம சாந்திக்காகவும், அம்மாவின், மற்றும் அனைவரின் மனம் அமைதி அடையவும் நானும் பிரார்த்திக்கிறேன்.
Viji,
pl. come out from that.
Pl.Pl console your mother.
I prey for your family dear.
viji
துயரிலிருந்து நீங்களும் அம்மாவும் குடும்பத்தினரும் மீண்டு வர என் பிரார்த்தனைகள். நிச்சயம் அப்பாவின் ஆசி தங்களுடனேயே இருக்கும்.
நீங்கதான் அம்மாவுக்கு தைரியம் சொல்லணும் விஜிக்கா! சில இழப்புக்களை காலம்தான் மறக்கவைக்கும். முடிந்தால் அம்மாவை உங்க யாருடனாவது சிலகாலம் அழைத்து வந்து வைச்சுக்கோங்க.
இந்த கடினமான சூழலும் கடந்து போகும்.மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள்!
ஆமாம் மகி. ராமலஷ்மி.
நான் இப்பொழுதான் உங்கள் பதிவிற்கு வந்தேன் .. ஆனால் நீங்கள் கூறியுள்ளதை பார்த்தால் மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது . மனதை தேற்றிக்கொண்டு நீங்கள்தான் அம்மாவுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் ..
Very Sorry to hear his very sad news.
It's ok Vai.Go .sir.
Post a Comment