ஓண விழா கொண்டாடும் எல்லோருக்கும் என் ஓண ஆசாம்சகள்(வாழ்த்துக்கள்)
இந்த நாள் இணிய நாளாகட்டும் என்று வாழ்த்தி ஓண சத்தியா சாப்ப்பிடவும்
நான் இந்த தடவை பெரிதாக ஏதும் செய்யவில்லை. அப்பா மறைந்து 4 மாதம் தான் ஆகிறது.
இருந்தாலும் வீட்டில் பெரியவர்கள் பண்டிகையை முடக்கவிட கூடாது என்று சொன்னதினால்
அவியல், நேந்திரங்காய் சிப்ஸ். அடை பாயசம்,படங்கள் வந்து கொண்டே இருக்கிறது.
நான் பிறந்த ஊரில் இன்று மிக கோலகலமாக நடக்கும் இந்த ஓண பண்டிகை. பத்து நாட்களும் வீட்டின் முன் முற்றத்தில் பூக்களினால் கோலமிட்டு அதில் பூவைத்து அலங்காரம் செய்து அதை கடவுளாக நிணத்து தினமும் பூதிய பூக்களை வைத்து அலங்காரம் செய்வது பார்க்க ரொம்ப அழகாக இருக்கும்.
ஓண ஊஞ்சல், அத்தப்பூ, தாலபொலி,லைட்களினால் தெருவுகளில் ம்ரங்களில் எல்லாம் அலங்காரம் செய்து இருப்பார்கள். இது ஒரு மாதம் முன் தொடங்கிவிடும். ஒணம் முடிந்த மறு நாள் பரேட் இருக்கும். அந்த பரேடில் எல்லா ஊர்காரர்களும் அவங்க ஒரு டாபிக் வைத்து லைட் டெக்ரேஷன் செய்து ஓணம் முடிந்த மறு நாளில் பரேட் வைப்பார்கள். இதற்க்கு மிக பெரிய கூட்டம் வரும்.
இதெல்லாம் நான் சின்ன வயதில் பார்த்து ரசித்தது. இப்ப எல்லாம் டிவியில் பார்பதோடு சரி.
ஆனால் இங்கு கேரளா அசோஷியஷினில் ஒண ப்ரோக்கிரம் எல்லாம் ரடக்கும் அதில் நாங்க எல்லாம் கலந்துகொண்டு பாட்டு, நடனண். மாறுவேடப்போட்டி, குழந்தைகளுக்கு க்ராப்ட்ஸ், ட்ராயிங், பேச்சுபோட்டி. தாலெபொலி போன்றவை எல்லாம் வைப்பார்கள். ஓண சத்யாவும் உண்டு. நன்றாக நடக்கும். உங்களுக்காக் இதோ கேரளாவில் ஒணத்தன்று நடக்கும் இந்த பூ டெக்கெரேஷனும், ஓண் சத்யாவும் தான் அங்கு ஸ்பெஷல்.
9 comments:
அருமை... தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...
தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி
ஓணம் வாழ்த்துக்கள் விஜி
கோலம் சூப்பர்ர்.. ஓணப்பண்டிகை வாழ்த்துக்கள் விஜி.
beautiful pics
அது என்ன //தாலெபொலி// !! க்யூரியாஸிடிதான். ;) விபரம் சொல்லுங்க விஜி.
ஓணசத்தியா பார்க்கும் போதே சாப்பிடத் தோணுது...
பூக்கோலம் நல்ல அழகோ அழகு.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
Post a Comment