விஜய் டிவிக்கு நன்றி சொல்லியேயாக வேண்டும். உலகத்தில் உள்ள எல்லோருடைய்ய வீட்டிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் ஒரே நிகழ்ச்சி இது ஒன்று தான்.
எங்கு சென்றாலும் இது தான் பேச்சு. சூப்பர் சிங்கர் பட்டம் யாருக்கு என்று இத்தனை மாதங்களாக இருந்தது இன்று ஒரு நல்ல நாளாக அதுவும் ஆச்சரியத்தோடு பட்டத்தை ஒரு மிகப்பெரிய இசை கலைஞர் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் அவர்களின் கையால் பெறுவது என்பது கனவிலும் நினைத்து பார்க்க முடியாது, அதை இன்று ஒரு சிறுவன் ஆஜித் தன் திறமை நன்றாக பாடி அதை வென்று விட்டான்,
முதல் இடத்தை வென்ற ஆஜித் என்கிற சின்ன பையன் எவ்வளவு பெரிய ஜனகூட்டத்தின் முன் சற்றும் மனம் தளர விடாமல் எந்த பயமும் இல்லாம் கேஷுவலாக பாடி அழகான ஏ ஆர் ரஹ்மானின் இசையின் பாட்டை பாடி உலகத்தில் உள்ள எல்லார் மனதிலும் இடம் பிடித்து மொத்த ஒட்டையும் வென்று சூப்பர் சிங்கர் என்ற பட்டத்தை வென்றார்.சின்ன அழகு சிங்க குட்டி ஆஜித் வென்றது பெரிய ஒரு விஷயம். வாழ்த்துக்கள் ஆஜித்.லவ்லி ஹான்சம். அழகு சிங்ககுட்டி.
ஆஜித வாழ்க மேலும் மேலும் பல புது இசை கலைஞர்களின் வாய்ப்பை பெற வாழ்த்துகிறேன்.
அடுத்த 2 வது இடத்தை வென்ற எங்கள் நாட்டு இசை குயில் ப்ரகதி இந்த பெண்ணும் தன் சின்ன வயதிலே கர்நாடக இசை பயின்று விடா முயற்ச்சியால் வென்றுவிட்டது மா பெறும் பாக்கியம்.வாழ்த்துக்கள் ப்ரகதி
யாழினி என்ற சின்ன குயில் தன்னுடைய்ய கடின முயற்ச்சியால் 3 வது இடத்தை எட்டி பிடித்தார். வாழ்த்துக்கள் யாழின்.
இசையின் வெற்றியை நானும் உங்க எல்லோருடனும் பகிர்ந்துகொள்கிறேன்.
மற்றும் கௌதம், சுகன்யாவுக்கும் வாழ்த்துக்கள்.
Congrats Aajeedh.
Congrats Pragathi.
Congrats Yazhini.
Airtel Super Singer Aajeedh.