Friday, November 30, 2012

Organic Garden Veggies






இந்த வருட எங்க வீட்டு தோட்ட சாகுபடி:
முதலில் பீன்ஸ் எடுத்துகோங்க, அடுத்து வெள்ளை முள்ளங்கி, அடுத்தது செர்ரி டொமேட்டோஸ். மீதி லோரியில் லோட் ஆகிட்டே இருக்கு.
வெள்ளரிக்காய்
ப்ளம்ஸ்
இவை எல்லாமே நாச்சுரல மண்ணில் போட்டு விளைந்தது.எங்க வீட்டவருக்கு தொட்டியில் போட்டு வளரவிட அவ்வளவாக இஷ்டமில்லை.அந்த மண்ணில் கூட கலப்படம் இருக்கு.அதனால் உனக்கு முடியும் என்றால் நம் வீட்டு மண்ணில் விதைகள் போட்டு பார், வளர்ந்தால் நல்லது, இல்லை என்றால்வருத்தபட வேண்டாம். உரமும் ஒன்றும் கெமிக்கல் இல்லை.வெறும் அரிசி களைந்த தண்ணிர், காப்பி டிகாஷன் இது தான் எங்கள் வீட்டு உரம்.அதனால் கொஞ்சம் லேட்டாக விளைந்தது.இன்னும் படங்கள் வந்து கொண்டே இருக்கிறாது. வெள்ளாரி, ப்ளம்ஸ், வெண்டை வருகிறது நிறய்ய இருப்பதால் லாரியில் லோட் ஏற்றி வந்துகொண்டே இருக்கிறது.  இப்போது  பீன்ஸ், முள்ளங்கி, செர்ரி டொமேட்டொஸ் மட்டும் தான் வந்தது.




Monday, November 19, 2012

திருமணநாள்

இன்று எங்களின் திருமண நாளுக்கு ஒரு சின்ன மெனு செய்தேன்.
என் குட்டிஸ் எல்லாம் சேர்ந்து ஒரு கார்ட்+கப் கேக் செய்து குடுத்தாங்க. மிக டேஸ்டியாகவும் நல்லாவே இருந்தது. கொஞ்சம் ஹெல்ப் செய்தேன்.
என்னவர் ஒரு டிசைனர் நெட்டட் ஸாரி, ஒரு இயரிங் வாங்கி குடுத்தார். மாலையில் பெட்டுச்சீஸ் பீஸ்ஸா, பாஸ்தா, வெஜ் லசாங்கா. பிங்க் லெமனேஐட், ராஸ்பெர்ரி ஐஸ்ட்  டீ, சாக்லேட் லேயர் கேக். இதெல்லாம் என் மகள் செலக்ட் செய்த மெனு.



வீட்டில் நான் செய்ததது.சேமியா பாயசம், மலபார் கீ ரைஸ், அவியல். உருளை வறுவல்.சாம்பார். பப்படம். க்ரான்பெர்ரி ஊறுகாய். தயிர்.







Tuesday, November 6, 2012

அமெரிக்கா எலக்‌ஷன்

நாங்களும் ஒட்டு போட்டு வந்தோம், இங்கு குழந்தைகளோடு போகலாம். குழந்தைகளுக்கு டம்மியாக நேற்றே ஒட்டு போட சொல்லி அவங்களுக்கும் அந்த ஒரு ப்ஃலிங்க் வரணும் என்றும் அவங்களும் தெரியவேண்டும் என்று அவங்க பள்ளியில் ட்ரையல் வெச்சாங்க. என் மகளும் வந்து மம்மி நான் வோட் போட்டேன் என்று சந்தோஷமாக வந்து சொன்னது மட்டும் இல்லாமல் இன்று யார் வெற்றி பெறுவார்கள் என்று டிவியை பார்த்து தூங்கிட்டாங்க.
மீண்டும்  பராக் ஒபாமா வெற்றி. அதை அவருடைய்ய சொந்த இடமான சிக்காகோவில் வெற்றியை கொண்டாடி கொண்டு இருக்கிறார்.மிகவும் சந்தோஷமாக இருக்கு.
வாழ்த்துக்கள் ஒபாமா.

எங்க நாட்டின் செனட்டர் எலிசபெத் வாரான் வெற்றி பெற்றார். வாழ்த்துக்கள் வாரன்.