Wednesday, June 29, 2011

பியோனி & ரோஸ்























நீண்ட நாட்கள் கழிந்து இப்ப தான் வரமுடிந்தது. குட்டிஸுக்கு விடுமுறை அதனால் இனிமேல் கொஞ்சம் ரெகுலரா வருவேன் என்று நம்புகிறேன்.
என் நணபர்கள் எல்லாரும் எப்படி இருக்கிங்க.
உங்க எல்லாருக்காக எங்க வீட்டு தோட்டத்தில் இந்த வருடம் பூக்கள் பூத்திருக்கிறது. அதுவும் பியோனி பிங்க் கலர் + ரோஸ் வாவ் என்ன பெரிய பூ. எனக்கு ஒரே சந்தோஷம் தாங்க முடியல்ல. அதனால நான் உங்களுக்காக இதோ இந்த பூக்கள்.














Sunday, May 8, 2011

அன்னையர் தின வாழ்த்துக்கள்.

















அன்னையர் தின வாழ்த்துக்கள்.

எல்லா அன்னையருக்கும் அன்னை ஆக போகிறவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
என் குழந்தைகள் கார்ட், கேக், ப்ரேக்பாஸ்ட் எல்லாம் செய்து குடுத்தாங்க. மிக சந்தோஷமாக இருக்க்கு.
பான்கேட், ப்ருட் சாலட் காலை சிற்றுண்டி வாவ் நல்ல ஹெல்தி ப்ரேக்பாஸ்டோட இனிமையான இந்த அன்னையர் தினம் நாளை நானும் என் குழந்தைகளோடு கொண்டாடுகிறேன். என் அம்மாவுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

Friday, May 6, 2011

லேடிஸ் ஸ்பெஷல்( Ladies Special Magazine)

என்னுடைய்ய இந்த கிரியேஷனின் 100 வது பதிவு. எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும் இந்த செய்தியை உங்களுடன் என் வலைதள நட்புலகத்தோடு பகிர்ந்துக்கிறேன். மேலும் மேலும் நிங்க எல்லோரும் இங்கு வந்து சென்று உங்க கருத்துக்களை அன்போடும் வரவேற்கிறேன்.


மே மாத லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்த என்னுடைய்ய ஹாலிடேக்கு ஜாலி ட்ரிப்பா ஆர்டிகிள். எல்லாருக்கும் பயன்தரக்கூடியது.



































மேலும் விபரமாக படிக்க இங்கே செல்லவும்.
www.ladiespsecial.com

http://honeylaksh.blogspot.com/2011/05/blog-post_05.html







இந்த வாய்ப்பை தந்த லேடிஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஷா அம்மாவுக்கும். என் வலைபக்கத்தை லேடிஸ் ஸ்பெஷலில் அறிமுகப்படுத்திய தேனம்மைக்கும் என் மனமார்த நன்றி.
லேடிஸ் ஸ்பெஷல் பத்திர்கையில் எல்லா மாதமும் எல்லாருக்கும் எல்லாமே நல்ல பயனுள்ள தவல்கள அடங்கிய இந்த பத்திரிகையை நான் கிட்ட தட்ட எனக்கு நினைவு தெரிந்து ஒரு எட்டு வருடங்களாக வாசித்து வருகிறேன். அதிலும் தற்போது இனையத்திலும் வருகிற்து. அதனால் மாத்ம் வந்ததும் முதலில் லேடிஸ் ஸ்பெஷல் தளத்திற்க்கு சென்று ஒன்று விடாமல் வாசித்து விடுவேன். எனக்கு மிகவும் பிடித்த மாத இதழ். வாழ்க கிரிஷா அம்மா, வளர்க லேடிஸ் ஸ்பெஷல். இந்த அன்னையர் தின இதழில் எனக்கு வாய்பளித்த கிரிஷா அம்மாவுக்கும், தேனுக்கும், மற்றும் எல்லா அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.



இந்த வாய்ப்பை தந்த லேடிஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஷா அம்மாவுக்கும். என் வலைபக்கத்தை லேடிஸ் ஸ்பெஷலில் அறிமுகப்படுத்திய தேனம்மைக்கும் என் மனமார்த நன்றி.
கிரிஷா அம்மாவுக்கும், தேனுக்கும், மற்றும் எல்லா அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.



Saturday, April 30, 2011

மெஹந்தி டிசைன் (Simple Mehandi design)







எனக்கு மெஹந்தி டிசைன்ஸ் போட எல்லாம் தெரியாது, இது என் குழந்தைகளுக்கு போடுவதற்க்காக போட்டு பழகியது.
சிம்பிளா ஒரு சின்ன ட்ரையல்.

வாங்க மெஹந்தி போட தெரியாதவர்களுக்கும் என்னை போன்ற கற்று குட்டிகளுக்கும் மட்டும்தான் மற்ற எல்லோரும் பார்த்து கமெண்ட்ஸ் போடுங்க.
அடுத்த முறை நான் நல்லா போட முடியும்
முதலில் கையில் ஒரு சின்ன ஸ்கெட்ச் பென்னால் அவுட்லைன் டிசைன்ஸ் வரைந்து அதன்மேல் மெஹந்தி கோனினால் மெல்லியாதாக டிசைன் போடவும்.
டிசன்ஸ் ட்ரை ஆகியிருந்தால் லெமன் ஜூஸை இயர் பட்ஸால் தொட்டு வைக்கவும்.
அரைமணி நேரம் கழிந்து எடுக்கவும்.
ஏதாவது ஒரு எண்ணெய் வைத்து துடைத்து எடுக்கவும். சோப் போட்டு கழுவ வேண்டாம்.
என்ன கரெக்டா போட்டிருக்கேனா?





Thursday, April 7, 2011

அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டம்



அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்துக்கு குவிகிறது ஆதரவு நம் வலையுலக மக்களின் நிறய்ய கருத்துக்களும் போயி கொண்டிருக்கிறது. ஒரு பத்திரிகையில் இருந்து தொலை பேசி மூலம் இங்கு இருக்கும் ஒரு சங்கத் தொண்டர்களிடம் கேட்டார்கள் இந்தியாவில் நடக்கும் இந்த உண்ணாவிரததுக்கு உங்க நாட்டில் இருந்து தண்டி யார்த்திரை நடக்கிறது,ஒரு பெரிய ஊர்வல்ம் நடக்கிறது அதற்க்கு என்ன சொல்றிங்க என்று கேட்டார்கள். நாங்க எல்லோரும் சொன்னோம் எங்க சார்ப்பில் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவசியம் செய்வோம், செய்ய தயரார்.ஒரு நல்ல சிறந்த போரட்ட மனிதன்.
எங்கு நல்லது நடந்தாலும் அதற்க்கு நம் ஆதரவு எப்போதும் உண்டு. அதிலும் ஒரு தனி மனிதன் இந்த வயதான காலத்தில் போராடுவது என்பது அவ்ளவு சுலபமானது அல்ல. யர்ருக்காக எல்லாம் நம் நாட்டுக்கும், நமக்கும் தானே.

வாழ்க அன்னா ஹசாரே. வெல்க போராட்ட வெற்றி.
In two hundred cities across India today, thousands of college students, young executives and housewives joined a campaign that asks the government to enact an important new law to fight corruption.



Monday, April 4, 2011

Happy Ugadi

யூகாதி புத்தாண்டு வாழ்த்துக்கள்.





Friday, March 18, 2011

பேப்பர் டேபிள் மேட்



என் மகள் அக்‌ஷ்யா தன் ஸ்கூலைல் ஒரு டேபிள்மேட் செய்து ஷோ& டெல்க்கு எடுத்து சென்றது.