Friday, June 4, 2010

செந்தமிழால சேர்ந்திணைவோம்.

வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையில் 23 வது தமிழ் விழா இது.
FETNA 2010 தமிழர் திருவிழா:
செந்தமிழ்க் காவலர் என்று போற்றப்படும் ச. இலக்குவனாரின் நூற்றாண்டு விழாவாகவும் இந்த வருடம் அமைந்திருக்கிறது. இந்த வருடம் ”செந்தமிழால் சேர்ந்திணைவோம், செயல்பட்டே இனம் காப்போம்” என்கிற தலைப்பை மையாமாக வைத்து கதை, கவிதை, பாட்டு, நடனம், வினாடிவினா, கவியரங்கம்,கதை,கட்டுரை,ஜெப்டி, தமிழ் பீ,கவியரங்கம்,திருக்குறள் போட்டி எல்லாம் நடக்கவிருக்கிறது. இந்த பெஃட்னா தலமை குழு ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநிலத்தில் இந்த திருவிழாவை திட்டமிட்டு அங்குள்ள தமிழர்களுடன் உற்சாகத்துடன் ஒன்று சேர்ந்து உழைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறது.இந்த வருடம் கனெக்டிக்கடில் நடக்கிறது. வட அமெரிக்காவில் கனெக்டிக்கெட் மகாணத்தில் பவனி வரப்போகிறாள் நம் தமிழ்தாய். வரும் ஜூலை மாதம் 3-5 தினங்களில் (அமெரிக்க சுத்ந்திர தின விடுமுறை) அன்று வாட்டர்பெர்ரி என்கிற ஊரில் பாலஸ் தியேட்டரில் நடக்கவிருக்கும் கண்கொள்ளா காட்சி.
இதில் கலை இலக்கிய நிகழ்ச்சிகளும், அந்தந்த மாநிஙகளில் இருந்தும் தமிழ்சங்க நிகழ்ச்சிகள், ஏராளமான கலை நிகழ்ச்சிகளோடு கொண்டாட இருக்கிறது.
இந்தியாவில் இருந்து இயக்குனர், பாரதிராஜா, நடிகர், விக்ரம்,
நடிகை த்ரிஷா, தவத்திரு மருதாசல அடிகளார், நடிகர், சந்தாணம், பேராசியயை பர்வின் சுல்தானா, கவிஞர் தாமரை, மற்றும் பாடகி சாதனா சர்க்கம், மெல்லிசை இயக்குனர் ஹாரிஸ் ஜெயராஜ், பாடகர் கார்த்திக்குடன் இன்னிசையும் நடக்கவிருக்கிறது. காணா தவறாதிர். மேலும் விபரங்களுக்கு FETNA 2010. நன்றி. எங்களுடன் சேர்ந்து பணியாற்றுகிறா எல்லா வாலண்டியர்ஸுக்கும், ப்ரஸ் ரிலீஸுக்கும் இதை பப்ளிசிட்டி செய்ய உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் மறக்காமல் சொல்லவும்.
இந்த செய்தியை ஆர்வத்துடன் படிக்கிற நிங்கள் செய்யவேண்டியது
ஆசையிருந்தும் நேரம், தூரம், பணவீக்கம் போன்ற நெருக்கடியால் உங்களால்
வர முடியாவிட்டாலும், அமெரிக்காவில் உள்ள உங்கள், உறவினர்/நண்பருக்கு தெரிய படுத்தவும். அதை விட மேலானது உங்கள் வாழ்த்துக்களை மறக்காமல் FETNa வுக்கு அனுப்பவும்.

7 comments:

ஜெய்லானி said...

தெரியப்படுத்தியதுக்கு நன்றி..

athira said...

நீங்கள் போகிறீர்களா விஜி? சமர் வந்தால் எங்கும் கொண்டாட்டமே....

பழமைபேசி said...

//சமர் வந்தால் எங்கும் கொண்டாட்டமே....
//

சமர் அல்லங்க.... கோடை!
நான் போறேன்...இஃகி!!

vanathy said...

விஜி, தகவலுக்கு நன்றி. நீங்கள் போறீங்களா? நான் என் ஆத்துக்காரரிடம் கேட்டுப் பார்க்கணும்.

athira said...
This comment has been removed by the author.
Jaleela Kamal said...

நல்ல பகிர்வு விஜி ,

ஓ சம்மர் வந்துவிட்டது பிள்ல்ளைகளுக்கு வீவு அதான் உஙக்ளை ஆலையே கானுமா?

டீச்சர் உங்கள் வேலையெல்லாம் எப்படி போகுது.

viji said...

Kanmani En valthukkal.
Manathal kaikorkeran.
viji(aunty).