Friday, December 10, 2010

"2010" வருட டைரி மற்றும் ‘2011-ல் நீங்கள் சாதிக்க அல்லது விரும்புகிற எண்ணங்கள்’



"2010" வருட டைரி மற்றும் ‘2011-ல் நீங்கள் சாதிக்க அல்லது விரும்புகிற எண்ணங்கள்’ எல்லோருக்கும் புது வருடம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
அதிலும் சின்னவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் ஏதாவது
ஒன்றை மனதில் நினத்து கொண்டு இந்த வருடம் கண்டிப்பா எப்படியாவது
செய்ய வேண்டும் என்ரு ஒரு உறுதி மொழி வைத்து கொளவது வழக்கம்.
உதாரணத்துக்கு சில பேர் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நான்
இன்றில் இருந்து இனிமேல் கண்டிப்பா புகை பிடிப்பதை அறவே நிறுத்திட்டேன்,
சில பேர் இன்றில் இருந்து நான் உடற்பயிற்ச்சி தவறாமல் கடைபிடிக்க போகிறேன்.
என்று எத்தனை விதமோ நம்மிடம் இருக்கும்.

"2010" வருட டைரி மற்றும் ‘2011-ல் நீங்கள் சாதிக்க அல்லது விரும்புகிற எண்ணங்கள்’

2010 ஜனவரியில் இருந்து டிசம்பர் 2010 வரையில் நமக்கு எல்லார்க்கும்
ஏதாவது நல்ல சம்பவங்கள் அதுவும் மறக்க முடியாதவை இருக்கும்
இந்த தொடர் பதிவை எனக்கு ஒரு தோழி இ மெயிலில் எழுத சொல்லி டிசம்பர் 28 க்குள்
முடிக்க கேட்டு கொண்டிருக்கிறார்கள்.

நானும் இதை ஏன் என் வலைதள நட்புலக எல்லோருக்கும் எழுத அழைக்ககூடாதென்று யோசித்து உடனே அதை இனைத்து உங்க எல்லோரையும் இங்கே அழைக்கிறேன்.

.எதிர்பாராமல் நமக்கு சில நல்லவை கிடைத்திருக்கும் அல்லது அடைந்திருப்போம்
1. நமக்கு பிடித்த நல்ல விஷயங்கள்(
2. மறக்க முடியாத சம்பவம்( சந்தோஷமானது)
3. மகிழ்ச்சி தந்த அல்லது பிடித்த பொழுதுபோக்கு
4. அன்பு அல்லது பரிசுகள்
5. குழந்தைகள் இருந்தால் அவர்களின் மகிழ்ச்சியான விஷயம்
(குழந்தை இல்லாதவர்கள் கவலை வேண்டாம்,அவர்களுக்கு பிடித்த குழந்தைகளின்)
6. பிடித்த நல்ல மனிதர்கள்( அரசியல்வாதி, கலைஞர்கள்,உறவினர்கள்,நன்பர்கள்,நன்பிகள்)
7. பிடித்த உணவுகள் புதியதாய் ஏதாவது ட்ரை செய்து சாப்பிட்டது(புதிய ரெஸ்ட்ராண்டில்
சாப்பிட்ட அனுபவம்)
8. பிடித்த அல்லது மற்க்கமுடியாத இடங்கள்
9. வாழ்க்கையில் இந்த வருடத்தில் நடந்த மனதை தொடுகிற சம்பவங்கள்.(நல்லது,கெட்டது)
10 2010 ல் நிங்கள் சாதிக்க அல்லது விரும்புகிற எண்னங்கள்.

எல்லா நட்புலக நண்பர்களும், நண்பிகளும் வந்து கலந்துகொண்டு எழுதினால் மற்ற எல்லோரும்
தெரியாத, தெரிந்த நல்ல விஷயங்களை நாமும் தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு.

இதில் கலந்து கொள்ள

ராமலஷ்மி
ஸாதிகா
குறிஞ்ஞி
மல்லிக்கா
ஹூசைனம்மா
ஜலீ
நாட்டாமை
ஜெய்லானி
கவிதா
ஆஸியா

எனக்கு 10 பேர் தான் அழைப்பு குடுக்க சொல்லி ரூல்ஸ் குடுத்திட்டாங்க.
அதனால்
எனக்கு தெரிந்த 10 பேரை நான் இதில் எழுதுகிறேன்.
அவர்களை உங்களுக்கு முடிந்தால் தெரிந்தவர்களை தொடர் அழைப்புக்கு அழைக்கலாம்.

அவர்கள் இதோ

மேனகா
மஹி
அபி அப்பா
நாஞ்ஞில் மனோ
ஹைஷ்
ஆனந்தி
குறிஞ்ஞி
மனோ அக்கா
ஜெயஸ்ரீ
பவித்ரா
காஞ்சனா
வானதி
கவிதா
தேனம்மை
அஸ்மா



யார் யார் எழுதறிங்களோ அவர்கள் அவர்களுக்கு தெரிந்த 10 பேர்கள் தொடர் பதிவுக்கு அழைக்கவும்.

15 comments:

painted princess collection said...

Hi viji, Nice blog could you please give the details of the software you use for creating the blog in tamil
anandhirajan

ராமலக்ஷ்மி said...

"2010" வருட டைரி மற்றும் ‘2011-ல் நீங்கள் சாதிக்க அல்லது விரும்புகிற எண்ணங்கள்’ என்பதல்லவா பொருத்தம்? மாற்றி விடுங்களேன் விஜி.

தொடர்பதிவுகளைத் தொடர்ந்து தவிர்த்து வரும் என் பெயர்தான் பட்டியலில் முதலாவதாக! அழைத்த அன்புக்கு மிகவும் நன்றி. பொதுவாக 2010 பற்றி எழுதப் பார்க்கிறேன்:)!

Vijiskitchencreations said...

நன்றி ராமலஷ்மி. ஒரு சின்னப் எழுத்து பிழையினால் ஸாரி.
நன்றி. நன்றி. நன்றி.

Jaleela Kamal said...

விஜி சமையல் பக்கம் போய் தேடி களைத்து இங்கு வந்தேன்

தொடர் பதிவா சமையல் குறிப்பு போடுவதை விட. இது போல் தொடர் ப்பதிவுக்கு மூளைய கசக்கி
நிறைய ஹோம்வொர்க் செய்யனும் பொல இருக்கே\

மின்மினி RS said...

இது ஒரு நல்ல விசயம். நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ளலாம். தொடருங்கள்.

ஸாதிகா said...

அழைப்புக்கு நன்றி விஜி.ஏன் உங்கள் உறுதி மொழியைப்பகிரவில்லை விஜி?

Unknown said...

me the first.

greetings to ur blog.
adavance wishes to all the great bloggers

Asiya Omar said...

அழைப்பிற்கு நன்றி விஜி,எனக்கு விஜியின் வெஜ் கிச்சன் தான் தெரியும்,இன்று இந்த ப்ளாக்கையும் தெரிந்துகொண்டேன்,அழைப்பிற்கு மிக்க நன்றி.நிச்சயம் தொடர்கிறேன்.நிறைய யோசிக்கனும் போல.

Kurinji said...

அழைப்பிற்கு மிக்க நன்றி விஜி, கண்டிப்பாக எழுதுகிறேன் ....

குறிஞ்சி

ஹுஸைனம்மா said...

நல்ல விஷயம்தான்!! எழுதுறேன்ப்பா. ஆனா கொஞ்சம் டைம் வேணும். டிஸம்பருக்குள்ளேயே எழுதிடுறேன், இன்ஷா அல்லாஹ்.

ஜெய்லானி said...

ஆஹா..அடுத்த தொடரா....டபுள் ஒக்கே..!! விரைவில் ஜெய்லானி டீ வியில் எதிர் பாருங்கள் :-)))))))))))))))))

ஜெய்லானி said...

பத்து பேர்தானா ..? ரொம்ப கஷ்டமான விஷயம் ஆச்சே..!!செலக்ட் பன்னுவது ஹா..ஹா.. :-)

Vijiskitchencreations said...

எல்லாருக்கும் நன்றி. எல்லாரும் ஹோம் வொர்க்கை ஒழுங்கா செய்ய தொடங்கியாச்சா?
சரி நானும் பாதி முடித்திருக்கேன்.
விரைவில் உங்க எல்லோருக்கும் பார்க்க முடியும்.
கொஞ்சம் நேரத்தில் எழுதகூடியது அல்ல என்ன செய்ய என் தோழியின் அன்பு தொல்லைக்கு நான் அவசியம் கட்டு படவேண்டியதாகிவிட்டது.
தான் பெற்ற இன்பம் எல்லாரும் பெறவேண்டும் என்ற எண்னத்தில் என் நட்புலக தோழி தோழர்களையும் சேர்த்துகிட்டேன்.
ஸாதிகா நிங்க கேட்ட கேள்விக்கு நானும் எழுதிட்டே இருக்கேன். விரைவில் போடுகிறேன்.நன்றி.
ஆமாம் ஜெய் பத்துபேர் என்பது கொஞ்சம் கஷ்டமாத்தான் எனக்கும் இருந்தது. ஆனல் ரூல்ஸ் போட்டிருந்ததினால் பாலோ செய்ய வேண்டியதா போச்சு.

Asiya Omar said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.தொடர் பதிவு போட்டிருக்கேன்.

ராமலக்ஷ்மி said...

விஜி, தங்கள் அழைப்பினை ஏற்றுத் தொடர்ந்துள்ளேன் இங்கே:
தீராத ஆர்வம்.. பேனாவும் காமிராவும்.. - 2010_ல் முத்துச்சரம்

விதிமுறைகளை அப்படியே பின்பற்றவில்லை என்பதைப் பொறுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்:)!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)!