எனக்கு மெஹந்தி டிசைன்ஸ் போட எல்லாம் தெரியாது, இது என் குழந்தைகளுக்கு போடுவதற்க்காக போட்டு பழகியது.
சிம்பிளா ஒரு சின்ன ட்ரையல்.
வாங்க மெஹந்தி போட தெரியாதவர்களுக்கும் என்னை போன்ற கற்று குட்டிகளுக்கும் மட்டும்தான் மற்ற எல்லோரும் பார்த்து கமெண்ட்ஸ் போடுங்க.
அடுத்த முறை நான் நல்லா போட முடியும்
முதலில் கையில் ஒரு சின்ன ஸ்கெட்ச் பென்னால் அவுட்லைன் டிசைன்ஸ் வரைந்து அதன்மேல் மெஹந்தி கோனினால் மெல்லியாதாக டிசைன் போடவும்.
டிசன்ஸ் ட்ரை ஆகியிருந்தால் லெமன் ஜூஸை இயர் பட்ஸால் தொட்டு வைக்கவும்.
அரைமணி நேரம் கழிந்து எடுக்கவும்.
ஏதாவது ஒரு எண்ணெய் வைத்து துடைத்து எடுக்கவும். சோப் போட்டு கழுவ வேண்டாம்.
என்ன கரெக்டா போட்டிருக்கேனா?

5 comments:
விஜி நலமா?எனக்கும் மெஹந்தி டிசைன் போடத்தெரியாது.உங்களது கன்னி முயற்சியை பார்த்ததும் எனக்கும் மெஹந்தி போடும் ஆசை தொற்றிக்கொண்டு விட்டது.இது இன்றே கோன் வாங்கி டிரை பண்ணி விடுகிறேன்.
ப்ளாக் பின்க்காக அழகாயிருக்கு,மெகந்தி டிசைன் சூப்பர்,கொஞ்சம் டார்க் செய்தால் இன்னும் அழகு..மகள் தான் போடுவா எங்க வீட்டில்,இனி நானும் பழகறேன்..
விஜி நல்ல போட்டு இருக்கிங்க... இப்படியே அடிக்கடி போட்டு பழகுங்கள் சூப்பராக வந்துவிடும்.. உங்களுக்கு எனது ப்ளாகில் ஒரு அவார்டு கொடுத்திருக்கேன் பெற்றுக்கொள்ள வாருங்கள்
அழகாக இருக்கு விஜி. என் கன்னி முயற்சி எப்பவோ அரங்கேறிவிட்டது, ஆனா இப்பவும் கன்னியோடயே நிற்குது அதன்பின் போட்டுப்பார்க்கவில்லை எனக்கு அதில் பெரிதாக ஆர்வமுமில்லை, ஆனால் பார்க்கப்பிடிக்கும்.
arumai , nallaa pooddu irukkiingka
Post a Comment