Showing posts with label தோட்டங்கள். Show all posts
Showing posts with label தோட்டங்கள். Show all posts

Friday, November 30, 2012

Organic Garden Veggies






இந்த வருட எங்க வீட்டு தோட்ட சாகுபடி:
முதலில் பீன்ஸ் எடுத்துகோங்க, அடுத்து வெள்ளை முள்ளங்கி, அடுத்தது செர்ரி டொமேட்டோஸ். மீதி லோரியில் லோட் ஆகிட்டே இருக்கு.
வெள்ளரிக்காய்
ப்ளம்ஸ்
இவை எல்லாமே நாச்சுரல மண்ணில் போட்டு விளைந்தது.எங்க வீட்டவருக்கு தொட்டியில் போட்டு வளரவிட அவ்வளவாக இஷ்டமில்லை.அந்த மண்ணில் கூட கலப்படம் இருக்கு.அதனால் உனக்கு முடியும் என்றால் நம் வீட்டு மண்ணில் விதைகள் போட்டு பார், வளர்ந்தால் நல்லது, இல்லை என்றால்வருத்தபட வேண்டாம். உரமும் ஒன்றும் கெமிக்கல் இல்லை.வெறும் அரிசி களைந்த தண்ணிர், காப்பி டிகாஷன் இது தான் எங்கள் வீட்டு உரம்.அதனால் கொஞ்சம் லேட்டாக விளைந்தது.இன்னும் படங்கள் வந்து கொண்டே இருக்கிறாது. வெள்ளாரி, ப்ளம்ஸ், வெண்டை வருகிறது நிறய்ய இருப்பதால் லாரியில் லோட் ஏற்றி வந்துகொண்டே இருக்கிறது.  இப்போது  பீன்ஸ், முள்ளங்கி, செர்ரி டொமேட்டொஸ் மட்டும் தான் வந்தது.




Thursday, October 28, 2010

பீன்ஸ்&ப்ளம்ஸ்



எங்க வீட்டு தோட்டத்தில் இந்த வருடம் விளைந்த பீன்ஸ் & ப்ளம்ஸ்

Friday, September 3, 2010

ப்ளம்ஸ்,பீன்ஸ்(Plums&Beans)











இன்னும் பீன்ஸ் அறுவடை ஆகல்லை.


Tuesday, June 22, 2010

ரோஸ் & புதினா

இந்த தடவை இப்ப தான் தோட்டங்கள் எல்லாம் பூக்கலாமா, காய்க்கலாம என்று பேசிகொண்டு மெல்ல பூக்கா, காய்க்க தொடங்கியுள்ளது. எங்க தோட்டத்தில் ரோஸ் கலரில் அழ்கான பெரிய இதழோட பூத்திருக்கு.

புதினா பறிக்க பறிக்க துளிர்விட்டிருக்கு.



இந்த முறை எங்க வீட்டு தோட்டத்தில் விளைந்தது. தோட்டத்திற்குள் ஒரே வாசனை.


தண்ணிர் விட போகும்போதெல்லாம் உடனே பறித்து புதினா தொக்கு, புதினா ரைஸ் செய்யவேண்டும் என்று கை பறிக்க துடிக்கும்.




நேற்று ஒரு வழியாக பறித்து என் தோழிகளுக்கும். பக்கத்து வீட்டாருக்கும் அள்ளி குடுத்து அவங்களும் புதினா தொக்கு செய்தாங்க.


அடுத்து வெண்டை,பீன்ஸ்க்காக வெயிட்டிங்.


Wednesday, April 21, 2010

காய்கறி பயிர்


மக்களே கெதியா வாங்கோ. இந்த வருடம் நம்ம வீட்டில் தோட்டம் போட்டாச்சு. இனி இதெல்லாம் எடுத்து மன்னில் போடனும் விளைஞ்சதும்

எல்லாருக்கும் குடுத்திடலாம். என்ன யாருக்கெல்லாம் வேனுமோம் முதல்ல வாங்க வந்து எது வேனும் என்று சொல்லுங்க.


காய்கறிகள்


ஸ்ட்ராபெர்ரி,தக்காளி, குடமிளகாய், கத்தரிக்காய், பீன்ஸ்,வெண்டை இவ்வள்வு தான் இருக்கு.


பூக்கள். சூர்யகாந்தி, ரோஸ்,மார்னிங் க்ளோ, ப்யூரி எல்லாம் இருக்கும்

வாழை, முல்லை,



தோட்டம் போட முதலில் ஒரு பெரிய் இங்கு அந்த செட்டே கிடைக்கும்

இல்லை என்றால் ஒரு பெரிய ப்ளாஸ்டிக் ட்ரே எடுத்து அதில் அங்க்ங்கே சிறு துளைகள் இட்டு முதல் 1 இன்ஞ் மன் போட்டு கொஞ்சம் தண்ணிர் தெளித்து மீண்டும் இங்கு செடிக்கு என்று இயற்க்கை உரத்தோட மண் கிடைக்கும் அதை போட்டு அதன் மேல் திரும்ப 1 “ மன் போட்டு நல்ல அரை இன்ஞ் குழிவாக எடுத்து விட்டு அதில் விதைகள் தூவி மீண்டும் 1 “ மன் போட்டு மூடி ஒரு அட்டையில் என்னவெல்லாம் விதைகள் என்று எழுதி வைத்தால் மண்னில் எடுத்து நடும் போது சௌகரியமாக இருக்கும்.
தண்ணிர் தெளித்து வெயில் வரும் இடத்தில் வைக்கவும். வெளிநாட்டில் வெயில் வராதவர்கள் வசிக்கும் இடம் என்பதால் இந்த முறை இல்லை என்றால் நேரடியாகவே மண்ணில் போடலாம். இங்கு வெயில் வருவது லேட் அதனால் முதலில் இந்த மாதிரி போட்டு கொஞ்சம் முளைக்க தொடங்கியதும் அதை எடுத்து மண்னில் நல்ல 1” குழித்து அதில் இயற்க்கை மண் போட்டு இந்த செடியை எடுத்து ஒரு செடிக்கும் அடுத்த செடிக்கும் 2” இடைவெளிவிட்டு நடவும். இரண்டு நாள்களுக்கு ஒரு தடவை நல்ல தண்னிர் விட்டால் வளரும். கொடி பயிர் என்றால் அதற்க்கு தகுந்தார் போல் வேலி கொடி கட்டி விட்டால் நல்ல வளரும்.

வளர்ந்ததும் படங்கள் போடுகிறேன்.

நிங்க எல்லாரும் உங்க வீட்டு தோட்டகலையை பற்றி சொல்லுங்க.

Wednesday, April 14, 2010

ஸ்ப்ரிங் பூக்கள்











எங்க வீட்டு தோட்டத்தில் பூ பூக்க தொடங்கியாச்சு.








Wednesday, December 23, 2009

வாழை மரம்


வீட்டின் உள் வளர்ந்த வாழை

Monday, December 21, 2009

முள்ளங்கி


இது எங்க வீட்டு தோட்டதில் காய்ந்தது.