Tuesday, October 25, 2011

தீபாவளி வாழ்த்துக்கள்



















எல்லாருக்கும் இனிய தீபாவளீ வாழ்த்துக்கள்.
வாங்க வந்து இனிப்பு சாப்பிடுங்க.







Thursday, October 13, 2011

Helo Friends and bye for certain time



Surgery Day



என் இனிய வலையுலக நட்புள்ளங்களுக்கு எல்லாம் ஒரு ஹலோ சொல்லி கொள்ள மட்டுமே முடிகிறது. யாரும் தவறாக நினக்க வேண்டாம் ஏன் இந்த விஜி புதிய படைப்புகள் ஏதும் போடுவதில்லை இந்த வலைதளத்திற்க்கு போக வேண்டாம் என்று முடிவெடுக்க வேண்டாம், கொஞ்சம் உடல் நிலை சரியில்லாதலால் வர இயலவில்லை இதற்கேலாம் நாளை ஒரு தீர்வு வருகிறது வேறொன்றும் இல்லை ஒரு சர்ஜரி நாளைக்கு அது முடிந்து நல்ல படியா உடல் நிலை தேறியதும் பழையது போல் உங்க எல்லாருடையா வலை தளத்திற்க்கும் வருவேன் என்று சொல்லி கொள்கிறேன்.நிங்க எல்லாருக்கும் எனக்காக ப்ரார்த்திகொள்ளுங்கள், மீண்டும் நன்றி நான் விரைவில் குணமாகி வந்து உங்க எல்லாருக்கும் நல்ல இனிப்போடு புதிய படைப்புகளை கொடுக்கிறேன்.நாளை எனக்கு சர்ஜரி மறக்க முடியாத நாள் என்று உங்க எல்லாரிடமும் ஒரு சின்ன இடைவேளைக்கு பை சொல்லி கொண்டு மீண்டும் சந்திக்கிறேன். அதுவரைக்கும் உங்கள் விஜி.
நன்றி நன்றி நன்றி...................



Wednesday, October 5, 2011

நவராத்திரி 2011-சரஸ்வதிபூஜை



எங்க வீட்டு கொலு, எப்போதுமே ஏதாவது ஒரு புதிய பொம்மை வாங்குவது வழக்கம்.
இந்த தடவையும் அதேபோல் என் மகள் ஒரு லஷ்மி பொம்மையும்,தலையாட்டும் பொம்மையும் வாங்கினோம்.
ஒன்பது நாளும் விட்டில் விருந்தினர்கள் வருகை என ஸ்டுடன்ஸ் வருகை, நவராத்திரி அழைப்பு ஒரே பிஸி.

அடுத்து என் அக்டோபர் என் மகள் அக்‌ஷ்யாவின் பிறந்தநாள் அதற்க்கு ரெடி செய்வது,
அடுத்து தீபாவளி
அடுத்து ஹோலோவின்
அடுத்து கார்த்திகை
அடுத்து தாங்க்ஸ் கிவிங்

எங்களை போல் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு எல்லா விசேஷங்களும் செய்யவேண்டியுள்ள்தால் ஒரே பிஸியான வாழ்க்கை.
எல்லாமே நம் குழந்தைகளுக்கு இதெல்லாம் தெரியவேண்டும் என்று எல்லா விசேஷங்களும் செய்கிறோம்.

இன்று சரஸ்வதிபூஜை செய்தோம் ஆனால் சர்க்கரை பொங்கல், வடை, சுண்டல் எல்லாம் படம் எடுப்பதிற்க்கு முன் இது போட்டது.
மீதி திரையில் வரும்.












Thursday, September 8, 2011

Happy Onam

Wish all my readers,Facebook friends,followers

a very Happy Onam



a very Happy Onam















Wednesday, June 29, 2011

பியோனி & ரோஸ்























நீண்ட நாட்கள் கழிந்து இப்ப தான் வரமுடிந்தது. குட்டிஸுக்கு விடுமுறை அதனால் இனிமேல் கொஞ்சம் ரெகுலரா வருவேன் என்று நம்புகிறேன்.
என் நணபர்கள் எல்லாரும் எப்படி இருக்கிங்க.
உங்க எல்லாருக்காக எங்க வீட்டு தோட்டத்தில் இந்த வருடம் பூக்கள் பூத்திருக்கிறது. அதுவும் பியோனி பிங்க் கலர் + ரோஸ் வாவ் என்ன பெரிய பூ. எனக்கு ஒரே சந்தோஷம் தாங்க முடியல்ல. அதனால நான் உங்களுக்காக இதோ இந்த பூக்கள்.














Sunday, May 8, 2011

அன்னையர் தின வாழ்த்துக்கள்.

















அன்னையர் தின வாழ்த்துக்கள்.

எல்லா அன்னையருக்கும் அன்னை ஆக போகிறவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
என் குழந்தைகள் கார்ட், கேக், ப்ரேக்பாஸ்ட் எல்லாம் செய்து குடுத்தாங்க. மிக சந்தோஷமாக இருக்க்கு.
பான்கேட், ப்ருட் சாலட் காலை சிற்றுண்டி வாவ் நல்ல ஹெல்தி ப்ரேக்பாஸ்டோட இனிமையான இந்த அன்னையர் தினம் நாளை நானும் என் குழந்தைகளோடு கொண்டாடுகிறேன். என் அம்மாவுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

Friday, May 6, 2011

லேடிஸ் ஸ்பெஷல்( Ladies Special Magazine)

என்னுடைய்ய இந்த கிரியேஷனின் 100 வது பதிவு. எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும் இந்த செய்தியை உங்களுடன் என் வலைதள நட்புலகத்தோடு பகிர்ந்துக்கிறேன். மேலும் மேலும் நிங்க எல்லோரும் இங்கு வந்து சென்று உங்க கருத்துக்களை அன்போடும் வரவேற்கிறேன்.


மே மாத லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்த என்னுடைய்ய ஹாலிடேக்கு ஜாலி ட்ரிப்பா ஆர்டிகிள். எல்லாருக்கும் பயன்தரக்கூடியது.



































மேலும் விபரமாக படிக்க இங்கே செல்லவும்.
www.ladiespsecial.com

http://honeylaksh.blogspot.com/2011/05/blog-post_05.html







இந்த வாய்ப்பை தந்த லேடிஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஷா அம்மாவுக்கும். என் வலைபக்கத்தை லேடிஸ் ஸ்பெஷலில் அறிமுகப்படுத்திய தேனம்மைக்கும் என் மனமார்த நன்றி.
லேடிஸ் ஸ்பெஷல் பத்திர்கையில் எல்லா மாதமும் எல்லாருக்கும் எல்லாமே நல்ல பயனுள்ள தவல்கள அடங்கிய இந்த பத்திரிகையை நான் கிட்ட தட்ட எனக்கு நினைவு தெரிந்து ஒரு எட்டு வருடங்களாக வாசித்து வருகிறேன். அதிலும் தற்போது இனையத்திலும் வருகிற்து. அதனால் மாத்ம் வந்ததும் முதலில் லேடிஸ் ஸ்பெஷல் தளத்திற்க்கு சென்று ஒன்று விடாமல் வாசித்து விடுவேன். எனக்கு மிகவும் பிடித்த மாத இதழ். வாழ்க கிரிஷா அம்மா, வளர்க லேடிஸ் ஸ்பெஷல். இந்த அன்னையர் தின இதழில் எனக்கு வாய்பளித்த கிரிஷா அம்மாவுக்கும், தேனுக்கும், மற்றும் எல்லா அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.



இந்த வாய்ப்பை தந்த லேடிஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஷா அம்மாவுக்கும். என் வலைபக்கத்தை லேடிஸ் ஸ்பெஷலில் அறிமுகப்படுத்திய தேனம்மைக்கும் என் மனமார்த நன்றி.
கிரிஷா அம்மாவுக்கும், தேனுக்கும், மற்றும் எல்லா அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.



Saturday, April 30, 2011

மெஹந்தி டிசைன் (Simple Mehandi design)







எனக்கு மெஹந்தி டிசைன்ஸ் போட எல்லாம் தெரியாது, இது என் குழந்தைகளுக்கு போடுவதற்க்காக போட்டு பழகியது.
சிம்பிளா ஒரு சின்ன ட்ரையல்.

வாங்க மெஹந்தி போட தெரியாதவர்களுக்கும் என்னை போன்ற கற்று குட்டிகளுக்கும் மட்டும்தான் மற்ற எல்லோரும் பார்த்து கமெண்ட்ஸ் போடுங்க.
அடுத்த முறை நான் நல்லா போட முடியும்
முதலில் கையில் ஒரு சின்ன ஸ்கெட்ச் பென்னால் அவுட்லைன் டிசைன்ஸ் வரைந்து அதன்மேல் மெஹந்தி கோனினால் மெல்லியாதாக டிசைன் போடவும்.
டிசன்ஸ் ட்ரை ஆகியிருந்தால் லெமன் ஜூஸை இயர் பட்ஸால் தொட்டு வைக்கவும்.
அரைமணி நேரம் கழிந்து எடுக்கவும்.
ஏதாவது ஒரு எண்ணெய் வைத்து துடைத்து எடுக்கவும். சோப் போட்டு கழுவ வேண்டாம்.
என்ன கரெக்டா போட்டிருக்கேனா?





Thursday, April 7, 2011

அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டம்



அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்துக்கு குவிகிறது ஆதரவு நம் வலையுலக மக்களின் நிறய்ய கருத்துக்களும் போயி கொண்டிருக்கிறது. ஒரு பத்திரிகையில் இருந்து தொலை பேசி மூலம் இங்கு இருக்கும் ஒரு சங்கத் தொண்டர்களிடம் கேட்டார்கள் இந்தியாவில் நடக்கும் இந்த உண்ணாவிரததுக்கு உங்க நாட்டில் இருந்து தண்டி யார்த்திரை நடக்கிறது,ஒரு பெரிய ஊர்வல்ம் நடக்கிறது அதற்க்கு என்ன சொல்றிங்க என்று கேட்டார்கள். நாங்க எல்லோரும் சொன்னோம் எங்க சார்ப்பில் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவசியம் செய்வோம், செய்ய தயரார்.ஒரு நல்ல சிறந்த போரட்ட மனிதன்.
எங்கு நல்லது நடந்தாலும் அதற்க்கு நம் ஆதரவு எப்போதும் உண்டு. அதிலும் ஒரு தனி மனிதன் இந்த வயதான காலத்தில் போராடுவது என்பது அவ்ளவு சுலபமானது அல்ல. யர்ருக்காக எல்லாம் நம் நாட்டுக்கும், நமக்கும் தானே.

வாழ்க அன்னா ஹசாரே. வெல்க போராட்ட வெற்றி.
In two hundred cities across India today, thousands of college students, young executives and housewives joined a campaign that asks the government to enact an important new law to fight corruption.



Monday, April 4, 2011

Happy Ugadi

யூகாதி புத்தாண்டு வாழ்த்துக்கள்.





Friday, March 18, 2011

பேப்பர் டேபிள் மேட்



என் மகள் அக்‌ஷ்யா தன் ஸ்கூலைல் ஒரு டேபிள்மேட் செய்து ஷோ& டெல்க்கு எடுத்து சென்றது.




Thursday, March 17, 2011

பேப்பர் கல்ர் பொம்மை



இது என் குட்டி பென் தன்னோட ஸ்கூலில் ஷோ & டெல் டேக்கு செய்து எடுத்து சென்றது.
நான் செய்த ஹெல்ப் கட் செய்து குடுத்தது. வரைந்தது + ஐடியா எல்லாம் என் மகள் திவ்யா அவளே சொல்லி செய்ததது.

இதை அவ ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் + டீச்சர் எல்லாரும் பார்த்து வாவ் எப்படி இது செய்தாய் என்று கேள்வி இதற்க்கு இவ சொன்னது அதற்க்கு தானே இன்றைக்கு நான் ஷோ & டெல் க்க்கு எடுத்துட்டு வந்திருக்கேன் பொறுமையா இருங்க என்று சொல்லி
ஸ்டெப் 1

தேவையானவை
கலர் சாட் பேப்பர் ( உங்களுக்கு பிடித்தமான கலர்)
மார்க்கர்ஸ் அல்லது க்ரேயன்ஸ்
கத்தரிகோல்
பென்சில்
க்ளு

ஸ்டெப் 2

முதலில் கலர் பேப்பரில் விரும்ப்பமான அளவில் பென் உருவத்தை வரையவவும்
பின் எந்த விதமான் ட்ரெஸ் போட போறிங்களோ அதே போல் வரைந்து கட் செய்து
ஒரு கலர் பேப்பரில் உருவத்தை வரைந்து அதன் மேல் ஒட்டி நன்றாக ட்ரிம் செய்து விடவும்.
பின் தலைக்கு கருப்பு, லிப்ஸுக்கு ரெட் ஷுவுக்கு உங்களுக்கு பிடித்த கலர் என்று சொல்ல்லி
முடித்தாள். எல்லாரும் ஆ இவ்வளவும் நீயா செய்தாய் என்றதும் என் அம்மா கட் செய்து தந்தாங்க வரைந்தது நான் ஆனல் கொஞ்சம் ஸிக்ஸாக்காக இருந்தது அம்மா அதை நல்ல ட்ரிம் செய்து தந்தாங்க.
எனக்கு பிங் ரொம்ப பிடிக்கும் அதனால் நான் செலக்ட் செய்த ட்ரஸ் கலர்ஸ் பிங்.
தாங்ஸ் ப்ரெண்ட்ஸ் என்று சொல்லி முடித்தாள்.

பார்க்க ரொம்ப சிம்பிள் ஆனால் 4 வயது குட்டிஸ் செய்வது என்றால் கொஞ்சம் இல்லை நிறய்யவே பொறுமை தான்.

இந்தாங்க நிங்களும் பாருங்க.

இந்த மாதிரி கட் செய்து ஒட்டி செய்த டாலுக்கு ஏதாவது பேர் இருக்குமா என்று தெரியல்லை தெரிந்தால் சொல்லுங்க.


Tuesday, January 25, 2011

Snow Stom Day








போனவாரம் 8” ஸ்னோ + ஸ்ட்ராம் வந்து அந்த ஸ்னோவே இன்னும் கரைந்த பாடில்லை,
அதற்க்கும் மீண்டும் ஸ்னோ இன்று, நாளையும் இருக்கு.
டெம்ப்ரேச்சர் நேற்று 0 டிகிரி, இன்று -5, நாளை -6 வெளியில் போகமுடியவில்லை,
பள்ளிகள் எல்லாம் விடுமுறை.
வேலைக்கு செல்பவர்கள் பாதிபேர் வீட்டிலிருந்து வேலை பார்க்கிறார்கள்.
நான் எங்கள் வீட்டின் முன் இருக்கும் ஸ்னோவை கொஞ்சம் க்ளிக் செய்து கிடைத்ததை உங்களுக்காக இங்கே கொஞ்சம் எட்டி பாருங்க.
பார்த்து குளிர போகுது.

Friday, January 14, 2011

பொங்கல் வாழ்த்துக்கள்





பொங்கல் என்றாலே என் அம்மா எங்க வீட்டில் வைக்கும் பொங்கல் தான் நினைவுக்கு வரும்.
காலையிலே எழுந்து அம்மா வாசல் தெளித்து நல்ல பெரிய பொங்கல் பானை கோலம் போட்டு சுற்றிலும் அழகான சின்ன கோலங்கள் எல்லாம் போட்டு எங்க எதிர்வீடு பக்கத்து வீடு எல்லாரும் அவங்க வீட்டு வாசலில் முதலில் கோடு போடுவாங்க, அதற்க்கும் நல்ல பெரிய கலர்புல்லா கோலம் போட்டு யாரது நல்ல பெரிய கோலம் என்று பார்த்து அதை ரசிப்பதில் ஒரு அழகு.அதை படம்பிடித்து எல்லோரும் வரிசையா போயி பார்பார்கள்.
பின் அம்மா நல்ல அழகா முற்றத்தில் பெரிய கோலம் போட்டு சிவப்பு மன்னால் அலங்கரித்து, சூரியன், சந்திரன், கரும்பு, பொங்கல் பானை போட்டு அதில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு நைவத்தியம் செய்து அதை எல்லாரும் சாப்பிட்டு மகிழ்வதில் எல்லையில்லா ஆனந்த்தம்.
இப்ப இங்கு ஸ்னோவில் எங்கும் கோலமும் போட முடியாது முற்றத்தில் வைக்கவும் இயலாத விஷ்யம் பொஙல் வீட்டின் கிச்சனில் வைப்பது தான் பின் சாமிபடங்கள் முன் வைத்து நைவேத்தியம் செய்வது தான் அவ்வளவு தான். அதுவும் இந்த தடவை வீகெண்டில் வந்த்தால் எல்லா நன்பர்கள் குடும்பங்களோடு பொங்கல் கெட் டு கெதர். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொன்டாட்டம்.
தமிழ் சங்கத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் அதில் என் குழந்தைகளின் மெட்லி நடனம் இருக்கிறது. இங்கு பொங்கல் விழா பெப்ரவரி 5 கொண்டாடுகிறார்கள் அதர்க்கு டான்ஸ் ப்ராக்டிஸ் போயிகொண்டிருக்கு. ranoli competitions irukku.ஆர்ட்,competitions,unmute,spelling bee, kavithai,vinadi vina etc..
நிங்களும் எல்லோரும் பொங்கல் கொண்ட்டாட என்னோட இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Saturday, January 1, 2011

பென்சில் ஹோல்டர்


என் மகள் திவ்யா செய்தது.

மில்க் பாக்ஸ்(அட்டைபெட்டி)யில் செய்த்தது.

தேவையானவை


பழைய மில்க் கார்டன் பாக்ஸ்
அல்லது ஜூஸ் பாக்ஸ் - 1
கத்தரிக்கோல்
க்ளு
பழைய மாக்ஸின் படங்கள்


பென்ஸில்,பேனா மற்றும் எல்லாம் போடலாம்.

செய்முறை

மில்க் கார்டன் பாக்ஸை நன்றாக சுத்தம் செய்து காய வைக்கவும்.
அதை நமக்கு வேண்டிய அளவில் வெட்டி வைக்கவும்.
உள்ளே க்ளு தடவி மாகஸின் பேப்ப்ரரை ஒட்டிவிடவும்.
வெளியிலும் அதே போல் க்ளு தடவி மாகஸின் பேப்பரை ஒட்டி காய விடவும்.
காய்ந்த பின்பு 3 டி வைத்து டிஸைன் வரைந்தும் வைக்கலாம்.
ஸ்டோன்ஸ் ஒட்டலாம்.

இது ஜஸ்ட் மாகஸின் பேப்பரை ஒட்டி மேலே ஷைனிங் பேப்பர் ஒட்டிவிட்டது.
சிறு குழந்தைகளுக்கு க்ராப்ஸ் செய்ய கற்று கொடுக்கலாம்.
இதில் பேனா, பென்ஸில், மார்க்கர், க்ரயான் போன்றவை போட்டு வைக்கலாம்.