Wednesday, March 17, 2010

பிடித்த பத்து பெண்கள்

என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த என் தோழி ஜலீக்கு நன்றி. தொடர் பதிவுன்னு போட்டு நிறைய நிபந்தனைகளை வேறு போட்டு விட்டார்கள், எல்லோரும் பல பிரபல சாதனை பெண்களை சொல்லி பதிவு போட்டு இருக்கிறார்கள்.

நானும் எனக்கு பிடித்த,படித்த,தெரிந்த, கேள்விபட்ட பென்களை பற்றி உஙகளோடு பகிர்ந்துக்கிறேன். நான் பள்ளியில்,கல்லுரியில் படித்த,மனதில் பிடித்த இன்றைக்கும் என் மனதில் இடம் பிடித்த,நினைத்த கொண்டிருக்கிற சிலபேரை ப‌ற்றி எனக்கு தெரிந்ததை உங்களோடு பகிர்ந்துக்கிறேன்

நிபந்தனைகள் :- 1. உங்களின் சொந்தக்காரர்களாக இருக்க கூடாது., 2. வரிசை முக்கியம் இல்லை., 3. ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும், 4. இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் உள்ள நபர்களாக இருக்கவேண்டும்...

எனக்கு பிடித்த பத்து பெண்கள் (தொடர் தொடருங்கோ)


ஜெ. ஜெயலலிதா
தமிழ் நாட்டு முன்னாள் முதல் பென் அரசியல் தலைவரும் பிரபல முன்னாள் திரைபடநடிகையும் ஆன இவரின் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும். நல்ல துணிச்சலான நல்ல கம்பிரமான பேச்சும் நடையும் உள்ள ஒரு பெண்மனி.

டாக்டர் சாலினி மனநல மருத்துவர்.இவர் சென்னையில் மனநல க்ளின்க் நட்த்தி வருகிறார். இவருடைய்ய நல்ல தெளிவான தமிழ்+நல்ல எழுத்தாளார்,ஒரு விசித்திரமான பென் டாக்டர். நல்ல ஒரு தோழி போல பழகுவாங்க. நல்ல அவருடைய்ய பேச்சு ஒரு மருந்து என்று கூட சொல்லலாம், அந்த அளவுக்கு நல்ல பொறுமையாக பேசும் குணமுள்ளவ்ர்.
முனைவர். ராஜலட்சுமி பார்த்தசாரதி, ஒரு கல்வியாளர்; பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் தலைவர். இவருக்கு இவரது கல்வி சேவைக்காக 2010 -ஆம் ஆண்டின் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது . 82 வயதிற்க்கும் மேல் இருக்கும் இவர் நல்ல் திறமையும் தெளிவான சிந்தனையும், நினைவாற்றாலும் கொண்டுள்ள இவர் இன்றும் புதிய துறைகளை பற்றி தெரிந்து அந்த வசதிகளையும் பயிற்றுவிக்கிறது பத்மா சேஷாத்த்ரி பள்ளி. இங்கு படித்த எல்லா குழந்தைகளும் இன்று எல்லா துறைகளிலும் புக்ழ்பெற்று விளங்குகிறார்கள் என்பது குறிப்பிட தக்கது.மேலும் மேலும் நிறய்ய பட்டங்களும் பெற்று சேவையை தொடர இறைவன் அருள் புரியட்டும்.எம்.எஸ்.சுப்புலஷ்மி

எம் எஸ்.சுப்புலட்சுமி அவரது அமுதக்குரல் இன்றும் என்றும் நம்மிடையே ஒலித்துக் கொண்டிருக்கும். அது காலத்தால் அழிக்க முடியாத கம்பிரமான அமரக் குரல்.
அவரின் குரல் எத்தனை நேரம் வேண்டுமாலும் கேட்டுகொண்டே இருக்கலாம். அவர் பாடாத மொழிகள், பாடாத பாடுக்கள் இல்லை என்றே சொல்வது மிகவும் குறைவு. வேங்கேடச ஸுப்ரபாதம் இன்றும் திருப்பதி தேவஸ்தானத்தில் ஒலித்து கொண்டே இருக்கு. என்றென்றும் அழியா குரல்.எனக்கும் பாட்டு என்றால் ரொம்ப பிடிக்கும் அதிலும் எம்.எஸ்ஸின் குறையொன்றுமில்லை பாட்டு எனக்கு பிடித்தது.


ஸ்ரெஃபி கிராஃப்
எனக்கு இவரின் ஸ்டைல்+ விளையாட்டு இரண்டும் பிடிக்கும்.. நான் கல்லுரியில் படிக்கும் போதில் இருந்து எல்லா மேட்சையும் விடாமல் பார்ப்பேன்.
முன்னாள் டென்னிஸ் வீராங்கனை. ஜேர்மனியைச் சேர்ந்தவரான இவர் டென்னிஸ் வரலாற்றில் மிகக் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர். 22 தனிநபர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். 1988 இல் எல்லா (நான்கு) கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றதோடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றவர். டென்னிஸ் தர வரிசையில் 377 வாரங்கள் முதலிடத்திலிருது சாதனை படைத்தவர்.கிரண் பேடி இந்தியா காவல் பணியில் 1972ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரி யாவார். 2007ஆம் ஆண்டு விருப்பப்பணி ஓய்வு[1] பெற்றபின் சமூக சேவகியாக நலப்பணிகள் செய்து வருகிறார். இவர் ஆசிய பெண்கள் டென்னிஸ் போட்டியில் வென்றவரும் ஆவார். இந்தியாவின் பவர்புல் பென் என்கிறவரும் ஆவார். பல விருந்துகளும் பெற்றுள்ளார் இவரை போல் பென்கள் இருந்தால் எந்த பயமும் இல்லாமல் தைரியமாக நடமாடலாம்.
அன்னை தெரேசா அன்னை தெரேசா இவர் சிறந்த பரோபகாரி,இவர் ஸ்கோப்ஸி நாட்டில் பிறந்து இந்திய குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி.இவரை பற்றி சொல்வதற்க்கு எல்லையே இல்லை. இவரை போல் நல்லவர்கள் நம் இந்திய நாட்டில் இருந்ததை நினைத்து நாம் எப்போதும் பெருமை+ அவர் செய்த தொண்டுகளை எப்போதும் நினத்த பெருமை படவேண்டும். நல்ல தொண்டு உள்ளம் படைத்தவர். எத்தனையோ குழந்தைகளை காப்பாற்றிய நல்ல உள்ளம். என்றென்றும் மனதில் இடம்பிடித்தவர். எனக்கும் மிகவும் பிடித்த நல்ல மனிதர்.

கல்பனா சாவ்லா
இந்தியாவில் இருந்து விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி கல்பனா சாவ்லா.
கல்பனா மார்ச் 1995 ல், நாசா விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்தார். 1998 ல் அவரது முதல் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.கொலம்பிய விண்வெளி ஊர்தியான் STS-87 பயணித்த ஆறு வீரர்களில் ஒருவரான கல்பனாவின் இந்த முதல் பயணத்திற்கு அவர் நவம்பெர் மாதம் 19 ஆம் நாள், 1997 ஆம் ஆண்டு முதல் ஆயத்தமானார். முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற அழியா பெருமையை இவர் பெற்றார். இன்றைக்கும் எல்லார் மனதிலும் இடம்பெற்றவர். பென்களுக்குகு ஒரு நல்ல அடையாளமாக் திகழ்ந்தவர்.

மேரி கி்யூரி
இவரின் புக்ஸ் என் பள்ளி நாட்களில் நான் படிக்க தொடங்கியதில் இருந்த்து எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும்.
இவர் 2 முறை நோபல் பரிசு வென்றவர். வேதியியல்,இயற்பியலுக்காக (Physics&Chemistry)
ரேடியம் கண்டுபிடித்தவரும் இவரே.

இவரின் கதை ரொம்பவே வித்தியாசமானது. ஒரு பென் வாழ்வில் கஷ்டபடுவார்கள், ஆனல் மேரியின் வாழ்க்கை கதை கடைசிவரை கஷடத்தை அனுபவித்தே வாழ்ந்து இறந்து போனார்.
மூன்று கட்டங்களிலும் கஷ்டத்தை அனுபவித்தவர்.
முதல் கட்டம் வாழ்க்கையில் முன்னுக்கு வருவதற்க்கு
இரண்டாவது கட்டம் வாழ்க்கையில் வருக்கைக்கு
மூன்றாவது வந்தபின்பும்
அவர் இறந்தாலும் இன்றும் உலகில் அவரை மறக்கவும் முடியாது அவரின் கண்டுபிடிப்பால் உலகிற்க்கு எவ்வளவு பயனுள்ளதாக் இருக்கு என்பதை எல்லா விஞ்ஞானிகளும் அறிந்ததே.

இந்திரா காந்தி
இந்தியாவின் முதல் பெண் பிரதமர். இவரை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை, எனக்கு ரொம்ப பிடிக்கும்.. இந்தியா என்றால் இந்திரா. இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் மட்டுமல்ல, இவரின் பேச்சும்.கம்பிர பார்வையும் எனக்கும் ரொம்ப பிடிக்கும். . இவரை போல் இன்று வரை எந்த ஒரு பென்னும் அந்த இடத்திற்க்கு எட்டி கூட பார்க்க முடியாமல் இருந்தவர்.
என்க்கு எப்பவுமே பிடித்த என் அம்மா.
அடுத்தது என் கூட் பாட்டு சேர்ந்து படித்த பின்னனி பாடகி சித்ரா.

அடுத்து இந்த பதிவ தொடர அழைப்பது
என் தோழி அதிரா, இமா, வானதி,மஹி, ஹ்ர்ஷினியின் அம்மா(வாருங்கள்)

7 comments:

Jaleela said...

சூப்பர் விஜி, மனநிலை மருத்துவர் ஷாலினி, ராஜலகஷ்மி , ஸ்டெபி கிராபி யாரும் போடாதது

மற்ற பெண்களின் தேர்வும் சூப்பர்

Shama Nagarajan said...

nice post...enjoyed reading...please do join in this event http://myhandicraftscollection.blogspot.com/2010/03/sparrow-crafts-event10.html..check my blog for details

athira said...

விஜி நல்லாவே எழுதியிருக்கிறீங்க. தமிழ் எழுதத் தெரியாத நீங்கள், இவ்வளவுதூரம் எழுதுவது பாராட்டப்படவேண்டியது.

என்னைக் கொஞ்சம் மன்னிச்சுக்கொள்ளுங்கோ. என்னால இப்போ முடியாது. எனக்காக 5 இமாவும் 5 வானதியும் எழுதுவினம்:), புறிச்சுக்குடுக்கிறேன்(அதிராவுக்கு எவ்வளவு நல்ல மனசெனச் சொல்வது கேட்குது... தாங்கியூ விஜி:)).

அதுசரி வானதி என்றால் எங்கட கால் வச்ச வனிதானே? அவவுக்கும் தனிக்குடித்தனம் இருக்கோ? நேக்குத் தெரியாதே. ஒண்ணுமே பிரியல்ல உலகத்தில. நன்றி விஜி.

asiya omar said...

ரொம்ப அருமையான தேர்வு.பாராட்டுக்கள்.

இமா said...

ஷாப்பிங் பாக், கத்திரிக்கோல், க்ளூ, பேப்பர், கம்பி எண்டு குட்டிக் கிணத்துக்குள்ள கடை பரப்பிக் கொண்டு நிம்மதியா இருந்த இமாவை... இப்பிடியா கிணற்றுக்கு வெளியே தண்ணி இல்லாத தரையில் தூக்கிப் போடுவது! ;)) எ. கொ. வி. இ? ;)

(என்னைத் தவிர) உங்கள் தெரிவுகள் எல்லாம் சுப்பர்ப். ;)) அழைப்புக்கு நன்றி. ;)

அதீ...ஸ்..... நீங்கள் கழண்டது ஓகே. அதுக்காக என்னை மாட்டி விடுறியள்!! ;) ம்... இருங்கோ, உங்களைக் கவனிக்கிற நேரத்தில கவனிக்கிறன். ;)

மகி said...

தொடர் பதிவை எழுதி முடிச்சுட்டேன் விஜி. அழைத்தமைக்கு நன்றி!

Vijis Kitchen said...

ஜலீ,நிங்க அழைத்த தொடரின் பேரில் எனக்கு பிடித்தது எழுதிட்டேன். ரொம்ப நன்றி.

மகி ரொம்ப ரொம்ப நன்றி.
ஆஸியா வாங்க ரொம்ப நன்றி.
இமா சூப்பர். வாங்க.
அதிரா வானதி என்பது க்ராப்ட்ஸ் என்றல்ா தான் எனக்கு தெரியும். ஆமாம் நிங்க சொல்கிற வானதியே தான். எப்படியும் நான் எங்காவது தமிழில் தவறு செய்கிறேன். நானும் பிழை இல்லாமல் எழுதிகொண்டு வருகிறேன். ம்.. முன்னேற்றம் இருக்கு என்று சொல்றிங்க. சந்தோஷமா இருக்கு.
ஷமா ரொம்ப நன்றி. என் பென்னுக்கு எக்ஸாம் தொடங்கியுள்ளது அதனால் கொஞ்சம் பிஸி. அவசியம் கலந்துக்கிறேன். நன்றி.