Tuesday, March 30, 2010

மிருகங்கள்

Zoo என்றால் கண்டிப்பா எல்லரும் எதிர்பார்த்து போவது வாவ் சிங்கம், கரட், புலி. என்று. ஆனல் இப்பஎல்லாம் இந்த மாதிரி மிருகங்கள் இருப்பதே மிக குறைவு.
நாங்க எங்க ஊரில் செனறபோது ஒரு மிருககாட்சி சாலையில் ஆசையாய் போய் குழந்தைகளுக்கு காட்டலாம் என்றால் ஒரு சிங்கம், கரடி கூட இல்லை. இது இடம் எங்க ஊரில் இருந்து ரொம்ப தூரம் பயனம் செய்து போய் பார்த்தோம் இங்கு ஒவ்வொன்று தான் இருக்கு. என்ன அதிசய்ம் முன்பெல்லாம் சிங்கம், கரடி, புலி இதெல்லாம் அட்லீஸ்ட் 5 வாது பார்க்கலாம். இப்ப ஒன்னே ஒன்னு கன்னே கன்னு என்று பத்திரமா பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.அதில் எங்கள் கேமாரவில் சிக்கியது. எங்க குழந்தைகள் இதை பார்த்து நல்ல என்ஞாய் செய்தர்ர்கள். எங்க வீட்டில் எல்லாருக்கும் சிங்கம், புலி,நரி எல்லாம் ரொம்ப பிடிக்கும். அடுத்த தடவை இந்தியா வரும் போது என் குழந்தைகளுக்கு மேலும் நிறய்ய போய் கான்பிக்க வேண்டும்.Friday, March 26, 2010

தஞ்சாவூர் ஆலிலை கிருஷ்னன் (கேன்வாஸ்)இந்த பெயிண்டிங் நான் முதல் தடவையாக கேன்வாசில் செய்தது.

எனக்கு தாஞ்சாவூர் பெயிண்டிங் பிடிக்கும்.
ஆனல் அதனுடிய்ய எல்லா பொருட்களும் இங்கு எனக்கு கிடைக்கவில்லை
சரி அதே போல் கேவாசில் செய்யலாம் என்று முடிவு செய்து
நான் வரைந்து பெயிண்டிங் செய்தது.

தேவையானவை

கேன்வாஸ் போர்ட்
ஸ்டோன்ஸ்,க்ளிட்டஸ்
கலர் பெயிண்ட்ஸ்,
ப்ரஷ்கள், க்ளூ, ட்ரேஸிங் பேப்பர்
டிசைன்.

முதலில் கேன்வாஸில் பேஸ் கலரை பெயிண்ட் செய்து ஒரு நாள் காய விடவும்.

காய்ந்த பின் அதில் நமக்கு விருப்பமான டிசைனை கார்பன் பேப்பர் வைத்து கேன்வாஸ் போர்டில் வரையவும்.

பின் விரும்பிய கலரில் தட்டை ப்ரஷ்,மெல்லிய ப்ரஷ் வைத்து
பெயிண்டிங் செய்யவும்.

ஒரு நாள் காயவிடவும். காய்ந்தபின் க்ளு வைத்து கலர் ஸ்டோன்ஸ் வைத்து கை,கழுத்து டிசைனுக்கு நகைகள் வைத்து
அழகுபடுத்தவும்.

பார்டருக்கு கோல்டன் பேப்பர் வைத்து அழகுபடுத்தலாம்.

இதை கண்னாடி ப்ரேம் போடாமல் அப்படியே மாட்டலாம்.
இது பக்கத்தில் இருந்து பார்பதை விட கொஞ்சம் தள்ளி இருந்துபார்பதற்க்கு ஒர்ஜினல் தஞ்சாவூர் பெயிண்டிங் போல் நன்றாக இருக்கும்

Monday, March 22, 2010

காதணிகள்(தொங்கும் தோடு)
தேவையானவை

மணிகள் - 2
குண்டுசி கம்பிகள் – 2
வளையங்கள் - 2

குரடுகள்
கம்பி வெட்டும் குரடு
கம்பி வெட்டும் குரடு

செய்முறை

ஒரு குண்டுசி போன்ற கம்பியை எடுத்து முதலில் சின்ன மணியை கோர்க்கவும்,பின் பெரிய மனியை கோர்க்கவும்.
90 டிகிரி அளவில் வைத்து வளைத்து மீதியை வெட்டி விடவும்.
வளத்து வைத்துள்ள மனியில் வளையங்களை மாட்டி அதில்
கொக்கியை மாட்டி விடவும். அழகான தொங்கும் கம்மல் ரெடி.
இதே போல் உங்களுக்கு விரும்பிய ரெடிமேட் டிசைன் வாங்கி அதிலும் இதே போல் செய்யலாம்.

Friday, March 19, 2010

பேப்பர் மீன்
என் பென் அக்‌ஷ்யா செய்தது.

Wednesday, March 17, 2010

பிடித்த பத்து பெண்கள்

என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த என் தோழி ஜலீக்கு நன்றி. தொடர் பதிவுன்னு போட்டு நிறைய நிபந்தனைகளை வேறு போட்டு விட்டார்கள், எல்லோரும் பல பிரபல சாதனை பெண்களை சொல்லி பதிவு போட்டு இருக்கிறார்கள்.

நானும் எனக்கு பிடித்த,படித்த,தெரிந்த, கேள்விபட்ட பென்களை பற்றி உஙகளோடு பகிர்ந்துக்கிறேன். நான் பள்ளியில்,கல்லுரியில் படித்த,மனதில் பிடித்த இன்றைக்கும் என் மனதில் இடம் பிடித்த,நினைத்த கொண்டிருக்கிற சிலபேரை ப‌ற்றி எனக்கு தெரிந்ததை உங்களோடு பகிர்ந்துக்கிறேன்

நிபந்தனைகள் :- 1. உங்களின் சொந்தக்காரர்களாக இருக்க கூடாது., 2. வரிசை முக்கியம் இல்லை., 3. ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும், 4. இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் உள்ள நபர்களாக இருக்கவேண்டும்...

எனக்கு பிடித்த பத்து பெண்கள் (தொடர் தொடருங்கோ)


ஜெ. ஜெயலலிதா
தமிழ் நாட்டு முன்னாள் முதல் பென் அரசியல் தலைவரும் பிரபல முன்னாள் திரைபடநடிகையும் ஆன இவரின் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும். நல்ல துணிச்சலான நல்ல கம்பிரமான பேச்சும் நடையும் உள்ள ஒரு பெண்மனி.

டாக்டர் சாலினி மனநல மருத்துவர்.இவர் சென்னையில் மனநல க்ளின்க் நட்த்தி வருகிறார். இவருடைய்ய நல்ல தெளிவான தமிழ்+நல்ல எழுத்தாளார்,ஒரு விசித்திரமான பென் டாக்டர். நல்ல ஒரு தோழி போல பழகுவாங்க. நல்ல அவருடைய்ய பேச்சு ஒரு மருந்து என்று கூட சொல்லலாம், அந்த அளவுக்கு நல்ல பொறுமையாக பேசும் குணமுள்ளவ்ர்.
முனைவர். ராஜலட்சுமி பார்த்தசாரதி, ஒரு கல்வியாளர்; பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் தலைவர். இவருக்கு இவரது கல்வி சேவைக்காக 2010 -ஆம் ஆண்டின் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது . 82 வயதிற்க்கும் மேல் இருக்கும் இவர் நல்ல் திறமையும் தெளிவான சிந்தனையும், நினைவாற்றாலும் கொண்டுள்ள இவர் இன்றும் புதிய துறைகளை பற்றி தெரிந்து அந்த வசதிகளையும் பயிற்றுவிக்கிறது பத்மா சேஷாத்த்ரி பள்ளி. இங்கு படித்த எல்லா குழந்தைகளும் இன்று எல்லா துறைகளிலும் புக்ழ்பெற்று விளங்குகிறார்கள் என்பது குறிப்பிட தக்கது.மேலும் மேலும் நிறய்ய பட்டங்களும் பெற்று சேவையை தொடர இறைவன் அருள் புரியட்டும்.எம்.எஸ்.சுப்புலஷ்மி

எம் எஸ்.சுப்புலட்சுமி அவரது அமுதக்குரல் இன்றும் என்றும் நம்மிடையே ஒலித்துக் கொண்டிருக்கும். அது காலத்தால் அழிக்க முடியாத கம்பிரமான அமரக் குரல்.
அவரின் குரல் எத்தனை நேரம் வேண்டுமாலும் கேட்டுகொண்டே இருக்கலாம். அவர் பாடாத மொழிகள், பாடாத பாடுக்கள் இல்லை என்றே சொல்வது மிகவும் குறைவு. வேங்கேடச ஸுப்ரபாதம் இன்றும் திருப்பதி தேவஸ்தானத்தில் ஒலித்து கொண்டே இருக்கு. என்றென்றும் அழியா குரல்.எனக்கும் பாட்டு என்றால் ரொம்ப பிடிக்கும் அதிலும் எம்.எஸ்ஸின் குறையொன்றுமில்லை பாட்டு எனக்கு பிடித்தது.


ஸ்ரெஃபி கிராஃப்
எனக்கு இவரின் ஸ்டைல்+ விளையாட்டு இரண்டும் பிடிக்கும்.. நான் கல்லுரியில் படிக்கும் போதில் இருந்து எல்லா மேட்சையும் விடாமல் பார்ப்பேன்.
முன்னாள் டென்னிஸ் வீராங்கனை. ஜேர்மனியைச் சேர்ந்தவரான இவர் டென்னிஸ் வரலாற்றில் மிகக் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர். 22 தனிநபர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். 1988 இல் எல்லா (நான்கு) கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றதோடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றவர். டென்னிஸ் தர வரிசையில் 377 வாரங்கள் முதலிடத்திலிருது சாதனை படைத்தவர்.கிரண் பேடி இந்தியா காவல் பணியில் 1972ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரி யாவார். 2007ஆம் ஆண்டு விருப்பப்பணி ஓய்வு[1] பெற்றபின் சமூக சேவகியாக நலப்பணிகள் செய்து வருகிறார். இவர் ஆசிய பெண்கள் டென்னிஸ் போட்டியில் வென்றவரும் ஆவார். இந்தியாவின் பவர்புல் பென் என்கிறவரும் ஆவார். பல விருந்துகளும் பெற்றுள்ளார் இவரை போல் பென்கள் இருந்தால் எந்த பயமும் இல்லாமல் தைரியமாக நடமாடலாம்.
அன்னை தெரேசா அன்னை தெரேசா இவர் சிறந்த பரோபகாரி,இவர் ஸ்கோப்ஸி நாட்டில் பிறந்து இந்திய குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி.இவரை பற்றி சொல்வதற்க்கு எல்லையே இல்லை. இவரை போல் நல்லவர்கள் நம் இந்திய நாட்டில் இருந்ததை நினைத்து நாம் எப்போதும் பெருமை+ அவர் செய்த தொண்டுகளை எப்போதும் நினத்த பெருமை படவேண்டும். நல்ல தொண்டு உள்ளம் படைத்தவர். எத்தனையோ குழந்தைகளை காப்பாற்றிய நல்ல உள்ளம். என்றென்றும் மனதில் இடம்பிடித்தவர். எனக்கும் மிகவும் பிடித்த நல்ல மனிதர்.

கல்பனா சாவ்லா
இந்தியாவில் இருந்து விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி கல்பனா சாவ்லா.
கல்பனா மார்ச் 1995 ல், நாசா விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்தார். 1998 ல் அவரது முதல் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.கொலம்பிய விண்வெளி ஊர்தியான் STS-87 பயணித்த ஆறு வீரர்களில் ஒருவரான கல்பனாவின் இந்த முதல் பயணத்திற்கு அவர் நவம்பெர் மாதம் 19 ஆம் நாள், 1997 ஆம் ஆண்டு முதல் ஆயத்தமானார். முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற அழியா பெருமையை இவர் பெற்றார். இன்றைக்கும் எல்லார் மனதிலும் இடம்பெற்றவர். பென்களுக்குகு ஒரு நல்ல அடையாளமாக் திகழ்ந்தவர்.

மேரி கி்யூரி
இவரின் புக்ஸ் என் பள்ளி நாட்களில் நான் படிக்க தொடங்கியதில் இருந்த்து எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும்.
இவர் 2 முறை நோபல் பரிசு வென்றவர். வேதியியல்,இயற்பியலுக்காக (Physics&Chemistry)
ரேடியம் கண்டுபிடித்தவரும் இவரே.

இவரின் கதை ரொம்பவே வித்தியாசமானது. ஒரு பென் வாழ்வில் கஷ்டபடுவார்கள், ஆனல் மேரியின் வாழ்க்கை கதை கடைசிவரை கஷடத்தை அனுபவித்தே வாழ்ந்து இறந்து போனார்.
மூன்று கட்டங்களிலும் கஷ்டத்தை அனுபவித்தவர்.
முதல் கட்டம் வாழ்க்கையில் முன்னுக்கு வருவதற்க்கு
இரண்டாவது கட்டம் வாழ்க்கையில் வருக்கைக்கு
மூன்றாவது வந்தபின்பும்
அவர் இறந்தாலும் இன்றும் உலகில் அவரை மறக்கவும் முடியாது அவரின் கண்டுபிடிப்பால் உலகிற்க்கு எவ்வளவு பயனுள்ளதாக் இருக்கு என்பதை எல்லா விஞ்ஞானிகளும் அறிந்ததே.

இந்திரா காந்தி
இந்தியாவின் முதல் பெண் பிரதமர். இவரை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை, எனக்கு ரொம்ப பிடிக்கும்.. இந்தியா என்றால் இந்திரா. இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் மட்டுமல்ல, இவரின் பேச்சும்.கம்பிர பார்வையும் எனக்கும் ரொம்ப பிடிக்கும். . இவரை போல் இன்று வரை எந்த ஒரு பென்னும் அந்த இடத்திற்க்கு எட்டி கூட பார்க்க முடியாமல் இருந்தவர்.
என்க்கு எப்பவுமே பிடித்த என் அம்மா.
அடுத்தது என் கூட் பாட்டு சேர்ந்து படித்த பின்னனி பாடகி சித்ரா.

அடுத்து இந்த பதிவ தொடர அழைப்பது
என் தோழி அதிரா, இமா, வானதி,மஹி, ஹ்ர்ஷினியின் அம்மா(வாருங்கள்)

பரிசளிப்பு


சரியான விடையை தெரிவித்த என் தள தோழிகளுக்கு க்ரியேஷன்ஸ் சார்பில் பரிசளிப்பு.

என் தோழிகள் இலாவுக்கும், இமாவுக்கும், வானதிக்கும் என் அன்பான இந்த தங்க கோப்பையை பரிசளிக்கிறேன்.
சமத்தா வந்து வாங்கிகோங்கோ.மேலும் மேலும் நிறய்ய பரிசுகள் வெல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.

Friday, March 12, 2010

பறவை

வாங்கோ வாங்கோ கெதியா வந்து இது என்ன பறவை என்று சொல்லுங்க
பார்க்கலாம்.

என்ன இப்படி கேள்வி என்று பார்க்கிறிங்களா, எல்லாம் வந்து சும்மா போனா எப்படி உங்களுக்கும் ஒரு புதிர் போட்டி குடுக்கலாமே என்று தான், ஹா ஹா.

என் தள வருகையாளர்கள் எல்லாம் வந்து கெதியா சொல்லுங்க பார்க்கலாம்.

Thursday, March 11, 2010

வாழ்த்து அட்டை
பரிசுகள் குடுக்க டிப்ஸ்
சில நேரம் நம்முடைய்ய குழந்தைகளின் தோழிகள், நண்பர்களுக்கு பிறந்தநாள் வரும் போது நாம் சில நேரம் பரிசு வாங்க முடியாமல் அல்லது நேரம் இல்லாமல் மற்ந்து கூட இருக்கலாம், ஆனால் அவர்கள் அந்த நிமிடத்தில் உடனடி செய்து குடுக்க இதோ:
ஒரு கலர் சார்ட் பேப்பர் அல்லது வெள்ளை பேப்பரில் க்ரயான் அல்லது கலர் பென் வைத்து நல்ல விரும்பிய டிசைன் வரைந்து கிளிட்டர்ஸ் இருந்தால் அது வைத்து டெகடேரெட்ட் செய்து ஐந்தே நிமிடத்தில் அசத்திடலாம்.
நம்மாள் முடிந்த ஒரு சின்ன வாழ்த்து அட்டை செய்து அதில் நம்மிடம் இருக்கும் ஏதாவது ஒரு நல்ல பொருளை செல்லோ டேப் வைத்து ஒட்டி சின்ன பரிசை குடுத்து மகிழ்விக்கலாம். உதாரணதுக்கு ஒரு பென், பொட்டு,காதணி,பர்ஸ்,கி செயின்,இப்படி ஏதாவது ஒரு பொருளை அதில் வைத்து குடுத்தால் மகிழ்ச்சி.
Thursday, March 4, 2010

முத்து பொம்மை(Beads Doll)தேவையானவை

ப்ளாஸ்டிக் கலர் முத்துக்கள் - 1 பாக்கெட்
க்ளிட்டர்ஸ்
ட்ரெஸிங் டிசைங்
பெக் போர்ட்
(முத்த்க்கள் அடுக்கும் ப்ளாஸ்டிக் போர்ட்)
அயர்ன் பேப்பர் - 1
அயர்ன் பாக்ஸ்


செய்முறை


ட்ரேஸிங் டிசைனில் முத்துக்களை வரிசை படுத்தி அயர்ண் ஷிட்டை மேல் வைத்து குறைந்த
செட்டில் வைத்து அயர்ண் செய்யவும்.
முத்துக்கள் உருக தொடங்கி ஒன்றோடன்று ஒட்டி கொள்ளும்.
லேசாக அயர்ன் ஷிட்டை எடுத்து பாக்கவும், எல்லா பீட்ஸும் நன்றாக ஒட்டியிருந்தால் அயன்
ஷிட்டில் இருந்து கவனமாக மெல்ல எடுக்க வேண்டும்.
நன்றாக ஆறிய பின் க்ளிட்டர்ஸ் கொண்டு அழகுப்டுத்தவும்.

கவனிக்க வேண்டியவை குழந்தைகள் இந்த பொம்மையை சூடு ஆறும் வரை தொடாமல் இருக்க வேண்டும்.

இதே போல் உங்களுக்கு விரும்பிய டிசைனை கம்யூட்டரில் ப்ரிண்ட் எடுத்து அதில் முத்துக்களை வரிசைபடுத்தி இதே போல் அயர்ன் செய்து மேக்னேட் ஒட்டி ப்ரிட்ஜ் மேக்னட்டாக கிப்ட்ஸ் கொடுக்கலாம்.
என் பென் தன்னோட தோழிக்கு ப்ரசண்டாக கிதார் செய்து ப்ரசண்ட் செய்தாள்.
நிங்களும் ட்ரை செய்யலாம்.

Tuesday, March 2, 2010

நவராத்திரி கொலு

எங்க வீட்டு கொலு


ரட்டாசி மாதம் அமாவாசை கழித்து மறு தினம் நவராத்திரி பண்டிகை ஆரம்பமாகும்.
கொலு வைப்பதானால் அமாவாசை அன்று படி கட்டிவிட்டு பொம்மைகளை எடுத்து வைத்து அன்று முதல் நவராத்திரி முடியும் வரை தினசரி மாலையில் தெரிந்தவர்களை அழைத்து வெற்றிலை,பாக்கு,மஞ்சள், குங்குமம்,பழம், இவைகளுடன் ஏதாவது ஒரு சுண்டல் வைத்து கொடுப்பது வழக்கம். தற்ப்போது எல்லா நாடுகளிலும் வெற்றிலை கிடைப்பதில்லை அதனால் அவரவர் வசதிகேப்ப, ஒரூ கூடை, அல்லது தட்டு, பௌள், வீட்டிற்க்கு உபயோகமான பொருள், அலங்கார பொருள் என்று ஏதாவது ஒரு பொருளை வைத்தும் குடுக்கிறார்கள்.
கொலு வைக்கும் முறை
படிகள் வைக்கும் எண்கள் 3,5,7,9 என்ற ஒற்றை வரிபடி வைப்பது
அதிலும் ஒரோ படிகளுக்கு ஒரோ ததுவ குணங்களோடு வைப்பது உண்டு.
முதல் மூன்று தினங்க்ள் துர்காதேவியை வணங்குவது
அதன் பின் மூன்று தினங்கள் லஷ்மி தேவியை வணங்குவது
கடைசி மூன்று தினங்கள் சரஸ்வதி தேவியை வணங்குவது
பத்தாவது தினம் விஜயதசமி.
சரஸ்வதி பூஜை
கொலு வைத்தாலும், வைக்காவிட்டலும் எல்லா வீடுகளிலும் சரஸ்வதி பூஜை செய்வது வழக்கம்.
சரஸ்வதி படத்திற்க்கு ஒரு பச்சை ரவிக்கை துணியை வத்து அதில் புஸ்தகஙகள்,பேனா,லேட்டாப்,பென்சில்,சங்கித வாத்யங்கள், வைத்து அதற்க்கு சந்தணம்,மஞ்சள்,குங்குமம் வைத்து பூக்களாள் பூஜை செய்வார்கள்.
வீட்டில் இருக்கும் மேஜை,நாற்காலி,பீரோ,நடைவாசல்,மிஷின், எல்லாவற்றிர்கும் சந்தனம்,குங்கும வைப்பார்கள்.
நைவத்யதம் செய்து அதற்க்கு உளுந்து வடை, பாயஸ்ம், அவரவர் வீட்டு வழக்க்கப்டி சரிக்ரை பொங்கல், கொண்டகடலை சுண்டல்,செய்து நைவத்யம் செய்து வீட்டிற்க்கும் வரும் சுமங்கலிகளுக்கும்,குழந்தைகளுக்கும் வெற்றிலை பாக்கு,ம்ஞ்சள், வைத்து குடுத்து புண்ணியத்தை பெறுவது பழக்க வழக்கம்.
தற்ப்போது சனி,ஞாயிறு விடுமுறையாதலால் அதை ஒரு கெட் டு கெதர் போல் வைத்து அழைப்பது வழக்காமாகிவிட்டது.
விஜய த்சமி
சரஸ்வது பூஜ்ழை மறு நாள் காலையில் புனர் பூஜை செய்து நைவத்யம் செய்து பூஜையில் இருந்து புத்தகத்தை எடுத்து படிப்பது வழக்க்ம்.
அன்றைக்கு சிறு குழந்தைகளை வித்யா ஆரம்பம் என்று அன்று படிக்க வைப்ப்து வழக்கம், பாட்டு,டான்ஸ், புதியதாக ஆரம்பிக்க நல்ல் நாள் அன்று சேர்ப்பது வழக்கம், குருவிற்க்கு தட்சினையோடு ஆரம்ப கல்வி தொடங்கி வைப்ப்து வழக்கம்.
நைவத்யம் செய்துவிட்டு,கொலுவுக்கு மங்கலை ஆரத்தி எடுத்து விட்டு ஒரு சில பொம்மைகளை படுக்க வைப்பது வழக்கம்.
மறு நாள் செவ்வய்,வெள்ளி இல்லாமல் இருந்தால் மீண்டும் பொம்மைகளை எடுத்து வைத்து விடுவார்கள்.
இதில் அவரவர் குடும்படி மாற்றங்களோடு இருக்கும். எனக்கு தெரிந்ததை எங்க வீட்டு முறை படி எழுதியிருக்கேன்.