Tuesday, July 20, 2010

Strawberry Picking Birthday Party

ராஸ்பெர்ரி பர்த்டே பார்டி
என் மகள் திவ்யா ஜூன் 30 - 4 வது பிறந்த நாளை அவ பள்ளி தோழிகள்,தோழர்கள், குடும்ப நண்பர்களோடு ராஸ்பெர்ரி தோட்டத்தில் வைத்து இனிய பிறந்தநாள் கேக் வெட்டி சந்தோஷமாக கொண்டாடினோம்.எல்லாரும் வந்து வாழ்த்தியதை நாங்கள் எல்லாரும் மகிழ்ச்சியோடு கொண்டடினோம்.
என் மகள் ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தில் தான் வைக்க வேண்டும் என்று தன்னோட விருப்பத்தை 4 மாதங்களுக்கு முன்பே தெரிவித்தால், ஆனால் எல்லா இடமும் விசாரித்ததில் சீசன் முடிந்து இப்போ ராஸ்பெர்ரி தான் என்று எல்லா இடமும் சொல்லிவிட்டங்க ஆனால் வேறு வழியில்லாமல் அவளை சமதானம் செய்து ராஸ்பெர்ரி தோட்டதில் வைத்து கொண்டாடினோம்.மிக நன்றாக இருந்தது.
Hey Ride, Moon Bounce, Animal Feeding,Rasberry Picking,

எல்லாரும் வந்தவுடன் முதல் ஹே ரெய்ட்(வைக்கோல் நிறய்ய வைத்து ஒரு பெரிய ட்ராக்டர்) அதில் அந்த தோட்டம் முழுவதும் சுற்றி காட்டுவாங்க.(எல்லாரையும் ஒரே ட்ரிப்பில்) உண்மையிலே அது ரொம்ப நன்றாக இருந்தது. அந்த ட்ரக்கில் எல்லாரும் குழந்தை முதல் பெரியவர் வரை ஒன்றாக அமர்ந்து
பாட்டு டான்ஸ், ஸ்டோரி டெல்லிங் என்றும் எல்லாம் அதில் இருந்து கொண்டே பாடி, ஆடி ஊர்வலமாக சுற்றி வந்து பின்பு மூன் பவுன்ஸிங், ஆடு, கோழி,பேர்ட்ஸ்,முயல இவைகளுக்கு எல்லாம் ஆகாரம் குடுப்பது அதுவும் இங்கு ஒரு விளாயாட்டு போல் ஒரு சின்ன பௌலில் எல்லா ஸீட்ஸ் எல்லாம் போட்டு எல்லா குழந்தைகளுக்கும் கையில் குடுத்து அவங்களே போய் அதன் வாயில் குடுக்கவேண்டும். அது எல்லா குழந்தைகளும் குடுத்து என்ஞாய் பன்னினாங்க. அடுத்து டிபன், ஆப்பிடைசரில் ஆரம்பித்து,சமோசா, சிப்ஸ், குக்கிஸ் என்று அதை முடித்ததும் பீட்ஸா, என் தோழிகளின் சில பேரின் பெற்றோர்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாங்க அவங்க சில பேர் பிட்ஸா சாப்பிட மாட்டர்கள் அவர்களுக்க்கா வீட்டில் வெஜ் ரெடிமேட் சேவை(அதில் எல்லா காய்கறிகளும் சேர்த்து சாட் மசாலா போட்டு , லெமன் ஜூஸ்) சேர்த்து செய்திருந்தேன் அதுவும், டீ, குளிர் பானங்கள், லெமனேட், போன்றவை எல்லாம் சாப்பிட்டு பின்பு ஒரிரண்டு விளையாட்டுகள் விளையாடி கேக் கட்டிங் முடிந்து இறுதியில் ராஸ்பெர்ரி பறிப்பது அதுவும் எல்லாரும் ஒன்றாக அந்த தோட்டதில் வேலை பார்க்கும் ஒரு கெய்டை நமக்கு கூட அனுப்பி எந்த வரிசையில் நாம் பறிக்கவேண்டும் எவ்வளவு நேரம் பறிக்க வேண்டும் என்பதை சொல்லி அழைத்து சென்றார்கள், எல்லாருக்கும் ஒரு கூடை குடுத்து அதில் எவ்வளவு நிரப்ப முடியுமோ நிரப்பலாம்.
குழந்தைகளுக்கு எல்லாம் நன்றி சொல்லி எல்லா குழந்தைகளுக்கும் வந்து கலந்துகொண்டு என் மகளின் பர்த்டே நினவாக சின்ன பரிசுகளை எல்லார் கையிலும் கொடுத்து நன்றியை தெரிவித்து நாங்களும் எல்லா பரிசுகள், மீதியிருக்கும் கேக், பீட்ஸா எல்லாவற்றையும் முடிந்தவரைக்கும் அங்கு வந்தவர்களுக்கே யார் யாருக்கெல்லாம் கேக், பீட்ஸா, சமோசா வேண்டுமோ எடுத்து கொள்ளுங்க என்று சொல்லி வேண்டியவர்கள் எடுத்துவிட்டு மீதமானதை நாங்களும் வீட்டிற்க்கு எடுத்து வந்தோம்.நன்றாகவே இருந்தது.

6 comments:

viji said...

My God!
I missed everything and sitting inside the four wall.
My heartfull blessings to little Divya.
I enjoyed your writings and photos.
Thanks for sharing
viji(aunty).

Mrs.Menagasathia said...

Belated wishes to ur daughter!!

athira said...

Blated wishes to Divya.

Vijiskitchen said...

Thanks my dear friends.

இமா said...

வித்தியாசமாகக் கொண்டாடி இருக்கிறீங்க. படங்கள் அழகாக இருக்கின்றன.
திவ்யாக்குட்டிக்கு எனது வாழ்த்துக்கள்.

Anonymous said...

அட என்னங்க மேடம்! நாமெல்லாம் தெனமும் நம்ம தோட்டத்துல பண்றத அவங்க காசு வாங்கிக்கிட்டு எல்லாரையும் ஒரு நாள் மட்டும் செய்ய விட்டு இருக்காங்க! நமக்கு அடுத்த சந்ததிக்கு இந்த கொடுப்பனை கெடைக்குமான்னு தெரியல! கஷ்டமா இருக்கு இங்க சென்னை மக்களை நெனச்சா !