Wednesday, August 25, 2010

Varalakshmi nombu வரலஷ்மி நோன்பு பூஜை







இந்த நோன்பு ஆடி மாதத்தில் எல்லா தெலுகு, தமிழ் வீட்டில் கொண்டாடுவார்கள்.
மாமியா வீட்டில் கொண்டாடுவதாயிருந்தால் தலைமுறையாயி கும்பிட்டு வழிபடுவார்கள்.
இது வெள்ளிகிழமையில் கொண்டாடுவார்கள்.
சில பேர் மாமியார் வீட்டில் இல்லை என்றாலும் படம் வைத்து அஷ்டோத்திரம் செய்து
நை வேத்யம் செய்து வ்ழிபடுவது வழக்கம். அம்மனுக்கு அலங்காரம் செய்து, வீடு வாசல் எல்லாம் நன்றாக கழுவி சுத்தம் செய்து,வாழை, மஞ்சள் குலை,எல்லாம் கட்டி அலங்கரித்த மனையில் அம்மனை வைத்து வழிபடுவது வழக்கம். சிலர் வீடுகளில் படம் வைத்து, சிலர் வெள்ளி சொம்பில் அம்மன் முகம் வைத்தும், சில சுவரில் படம் வரைத்தும் செய்து வழிபடுவது வழக்கம்.
இதற்க்கு மஞ்சள் கயிரை வைத்து பூஜை செய்து கையில் கட்டுவார்கள்.
சுமங்கலிகளை அழைத்து மஞ்சள்,குங்குமம், வெற்றிலை ப்ரசாதம் குடுத்து ஆசிர்வாதம் வாங்கி கொள்வார்கள்.
இதற்க்குபழம்,பச்சரிசி இட்லி, பாயசம், வடை, கொழுக்கட்டை, கொத்து கடலை சுண்டல்,புளியோதரை, லெமன் ரைஸ் போன்றவற்றை செய்து அம்மனுக்கு நைவேத்யம் செய்து வணங்குவது வழக்கம்.

எங்க வீட்டிலும் செய்வது வழக்கம்.

2 comments:

viji said...

very divine.
Nice writeup.
viji

Unknown said...

Its very informative to know about varalakshmi nonbu