Friday, November 30, 2012

Organic Garden Veggies






இந்த வருட எங்க வீட்டு தோட்ட சாகுபடி:
முதலில் பீன்ஸ் எடுத்துகோங்க, அடுத்து வெள்ளை முள்ளங்கி, அடுத்தது செர்ரி டொமேட்டோஸ். மீதி லோரியில் லோட் ஆகிட்டே இருக்கு.
வெள்ளரிக்காய்
ப்ளம்ஸ்
இவை எல்லாமே நாச்சுரல மண்ணில் போட்டு விளைந்தது.எங்க வீட்டவருக்கு தொட்டியில் போட்டு வளரவிட அவ்வளவாக இஷ்டமில்லை.அந்த மண்ணில் கூட கலப்படம் இருக்கு.அதனால் உனக்கு முடியும் என்றால் நம் வீட்டு மண்ணில் விதைகள் போட்டு பார், வளர்ந்தால் நல்லது, இல்லை என்றால்வருத்தபட வேண்டாம். உரமும் ஒன்றும் கெமிக்கல் இல்லை.வெறும் அரிசி களைந்த தண்ணிர், காப்பி டிகாஷன் இது தான் எங்கள் வீட்டு உரம்.அதனால் கொஞ்சம் லேட்டாக விளைந்தது.இன்னும் படங்கள் வந்து கொண்டே இருக்கிறாது. வெள்ளாரி, ப்ளம்ஸ், வெண்டை வருகிறது நிறய்ய இருப்பதால் லாரியில் லோட் ஏற்றி வந்துகொண்டே இருக்கிறது.  இப்போது  பீன்ஸ், முள்ளங்கி, செர்ரி டொமேட்டொஸ் மட்டும் தான் வந்தது.




5 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

படங்க்ளில் காட்டப்பட்டவை எல்லாமே அழகாகவும் புத்தம்புதியதாகவும் [FRESH] ஆக உள்ளன. பாராட்டுக்கள்.

நாமே தோட்டம் போட்டு விளைந்தவைகளைப் பார்க்கும் போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். ;)

அதுவும் எந்தவித கலப்படமாக உரங்களும் இல்லை என்பது கேட்கவே மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.

பகிர்வுக்கு நன்றிகள்.

மாதேவி said...

அருமை.

நான் தினமும் மரக்கறிசமையல்தானே.

எனக்கும் ஒரு லொறி அனுப்புங்கள்.:)

Vijiskitchencreations said...

வாங்க வை.கோ ஸார். ஆமாம் ஒரு காய், பூவாகட்டும் நாம் கையால் விதை போட்டு அது விளைந்து வருவது பார்க்க உண்மையிலேயே ரொம்ப சந்தோஷாமா இருந்தது.
நன்றி.

Vijiskitchencreations said...

மாதேவி வாங்க. எப்படி இருக்கிங்க. நீண்ட நாட்கள் கழிந்து வந்திருங்கிங்க.
மிக்க மகிழ்ச்சி இங்கு பார்த்தது. ஆமாம் தினமும் வெஜ் தான் எம்ம வீட்டில். அவசியம் ஒரு லோறி போதுமா. என்னவெல்லாம் வேண்டும் சொல்லிப்டுங்கோ அனுப்புகிறேன். லேடிஸ் பஸ்ட்.நன்றி.

Unknown said...

மிகவும் அருமையான பதிவு தொடருங்கள் நன்றி சகோ!