பளாஸ்டிக்,தெர்மகோல்,எவர்சில்வர் எதாவது ஒரு தட்டு
கலர் டிஷ்யூ பேப்பர் அல்லது வெல்வட் துணி அல்லது பேப்பர்
க்ளூ
பழைய சிடி
விளக்கு ( அகல்விளக்கு, மெழுகுதிரி, சந்தன கிண்ணம்,குங்கும சிமிழ்) ஏதுவானலும் ஒன்று
கத்தரிகோல
அலங்கார மணிகள், அல்லது சமிக்கி,குந்தன், முத்து
செய்முறை
தட்டை டிஷ்யூ பேப்பரில் வைத்து வட்டமாக வெட்டி எடுக்கவும்.
துணியிலானும் சரி எதுவானலும் அந்த அளவில் வெட்டி வைக்கவும்.
தட்டில் பசை நல்ல தடவி வெட்டிய துணி அல்லது டிஷ்யூவை ஒட்டி காயவிடவும்
அதில் நடுவில் சிடியின் பின்புறம் பசை தடவி ஒட்டி காயவிடவும்.
சிடியின் நடுவில் மேல் பாகத்தில் ஒட்டை இருக்கும் இடத்தில் அதில் விளக்கு, அல்லது மெழுகுதிரி,கிண்ணம், அல்லது குங்குமசிமிழ் எது வேண்டுமானலும் வைத்து காயவிடவும்.
காய்ந்ததும் அதில் நம் கற்பனைகேற்ப்ப மணிகள்,குந்தன் கற்கள்,
முத்துகள் ஒட்டி நன்றாக காய்விடவும்.
விருந்தினர்களுக்கு பரிசாகவும், நம் வீட்டு பண்டிகைகளுக்கு உபயோகிக்கவும் செய்யலாம்.
பார்க்க நன்றாக பளிச் என்று மின்னும் அலங்காரத் தட்டு ரெடி.