2010
என் சின்ன மகள் முதன் முதலில் பள்ளிக்கு சென்றது மிகவும் சந்தோஷமானது.
என் குழந்தைகள் போட்டிகளில் கலந்து பரிசுகள் வென்றது.
நான் பெஃட்னாவில் கலந்து கவிஞர் தாமரையிடம் சான்றிதழ் பெற்றது.
என்னிடம் பயின்ற மாணவிகள் பாட்டு போட்டியில் கலந்து பரிசு வென்றது.
என் குடும்பத்தோடு கானடா சென்று விடுமுறை நல்ல சந்தோஷமாக கழ்த்த்து.
எனக்கு தமிழ் குடும்பத்தில் பரிசு கிடைத்தது.
என் குழந்தையின் ஆர்ட் பெஃட்னா புஸ்தகத்தில் வந்தது.
என் குழந்தைகளுக்காக டிஸ்னி சென்று அவங்களோட சந்தோஷத்தை பார்த்து மகிழ்ந்தது.
என் வலதளம் தேவதையில் வந்தது.
எனக்கு வலதளம் வழி நல்ல புதிய நிறய்ய நட்புக்கள் கிடைத்தது என்றென்றும்
மறக்க முடியாதது.
என் தொடர்பதிவை ஏற்று தொடர்ந்த என் நட்புலகத்தர்ரை மறக்க முடியாது.
எனக்கு நிறய்ய அவார்ட்கள் குடுத்து என்னையும், என் வலைதளத்தையும்
கௌரவபடுத்தி மேலும் புத்துணர்ச்சி தந்து எழுத தூண்டிய என் நண்பர்களை என்றும்
மறக்க முடியாதது.
நிறய்ய பாலோவர்ஸ் வந்து போவதை நினைத்து பெருமைபட்டது.
2011.
வாழ்வில் நோய் நொடியின்றி, சந்தோஷமாக வாழ இறைவன் அருள் கிடைக்க
வேண்டும்
என் குழந்தைகள் நன்றாக படித்து பெரிய ஆளாக வேண்டும்.
என் வலையுலக நண்பர்களை நேரில் பார்க்க ஆசை.
நிறய்ய புதிய விஷய்ங்களை கற்று கொள்ள வேண்டும்.
மேலும் மேலும் நிறய்ய பலோவர்ஸ் வர வேண்டும்.
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Friday, December 31, 2010
Friday, December 10, 2010
"2010" வருட டைரி மற்றும் ‘2011-ல் நீங்கள் சாதிக்க அல்லது விரும்புகிற எண்ணங்கள்’
"2010" வருட டைரி மற்றும் ‘2011-ல் நீங்கள் சாதிக்க அல்லது விரும்புகிற எண்ணங்கள்’ எல்லோருக்கும் புது வருடம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
அதிலும் சின்னவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் ஏதாவது
ஒன்றை மனதில் நினத்து கொண்டு இந்த வருடம் கண்டிப்பா எப்படியாவது
செய்ய வேண்டும் என்ரு ஒரு உறுதி மொழி வைத்து கொளவது வழக்கம்.
உதாரணத்துக்கு சில பேர் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நான்
இன்றில் இருந்து இனிமேல் கண்டிப்பா புகை பிடிப்பதை அறவே நிறுத்திட்டேன்,
சில பேர் இன்றில் இருந்து நான் உடற்பயிற்ச்சி தவறாமல் கடைபிடிக்க போகிறேன்.
என்று எத்தனை விதமோ நம்மிடம் இருக்கும்.
"2010" வருட டைரி மற்றும் ‘2011-ல் நீங்கள் சாதிக்க அல்லது விரும்புகிற எண்ணங்கள்’
2010 ஜனவரியில் இருந்து டிசம்பர் 2010 வரையில் நமக்கு எல்லார்க்கும்
ஏதாவது நல்ல சம்பவங்கள் அதுவும் மறக்க முடியாதவை இருக்கும்
இந்த தொடர் பதிவை எனக்கு ஒரு தோழி இ மெயிலில் எழுத சொல்லி டிசம்பர் 28 க்குள்
முடிக்க கேட்டு கொண்டிருக்கிறார்கள்.
நானும் இதை ஏன் என் வலைதள நட்புலக எல்லோருக்கும் எழுத அழைக்ககூடாதென்று யோசித்து உடனே அதை இனைத்து உங்க எல்லோரையும் இங்கே அழைக்கிறேன்.
.எதிர்பாராமல் நமக்கு சில நல்லவை கிடைத்திருக்கும் அல்லது அடைந்திருப்போம்
1. நமக்கு பிடித்த நல்ல விஷயங்கள்(
2. மறக்க முடியாத சம்பவம்( சந்தோஷமானது)
3. மகிழ்ச்சி தந்த அல்லது பிடித்த பொழுதுபோக்கு
4. அன்பு அல்லது பரிசுகள்
5. குழந்தைகள் இருந்தால் அவர்களின் மகிழ்ச்சியான விஷயம்
(குழந்தை இல்லாதவர்கள் கவலை வேண்டாம்,அவர்களுக்கு பிடித்த குழந்தைகளின்)
6. பிடித்த நல்ல மனிதர்கள்( அரசியல்வாதி, கலைஞர்கள்,உறவினர்கள்,நன்பர்கள்,நன்பிகள்)
7. பிடித்த உணவுகள் புதியதாய் ஏதாவது ட்ரை செய்து சாப்பிட்டது(புதிய ரெஸ்ட்ராண்டில்
சாப்பிட்ட அனுபவம்)
8. பிடித்த அல்லது மற்க்கமுடியாத இடங்கள்
9. வாழ்க்கையில் இந்த வருடத்தில் நடந்த மனதை தொடுகிற சம்பவங்கள்.(நல்லது,கெட்டது)
10 2010 ல் நிங்கள் சாதிக்க அல்லது விரும்புகிற எண்னங்கள்.
எல்லா நட்புலக நண்பர்களும், நண்பிகளும் வந்து கலந்துகொண்டு எழுதினால் மற்ற எல்லோரும்
தெரியாத, தெரிந்த நல்ல விஷயங்களை நாமும் தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு.
இதில் கலந்து கொள்ள
ராமலஷ்மி
ஸாதிகா
குறிஞ்ஞி
மல்லிக்கா
ஹூசைனம்மா
ஜலீ
நாட்டாமை
ஜெய்லானி
கவிதா
ஆஸியா
எனக்கு 10 பேர் தான் அழைப்பு குடுக்க சொல்லி ரூல்ஸ் குடுத்திட்டாங்க.
அதனால்
எனக்கு தெரிந்த 10 பேரை நான் இதில் எழுதுகிறேன்.
அவர்களை உங்களுக்கு முடிந்தால் தெரிந்தவர்களை தொடர் அழைப்புக்கு அழைக்கலாம்.
அவர்கள் இதோ
மேனகா
மஹி
அபி அப்பா
நாஞ்ஞில் மனோ
ஹைஷ்
ஆனந்தி
குறிஞ்ஞி
மனோ அக்கா
ஜெயஸ்ரீ
பவித்ரா
காஞ்சனா
வானதி
கவிதா
தேனம்மை
அஸ்மா
யார் யார் எழுதறிங்களோ அவர்கள் அவர்களுக்கு தெரிந்த 10 பேர்கள் தொடர் பதிவுக்கு அழைக்கவும்.
Subscribe to:
Posts (Atom)