Thursday, November 4, 2010

Happy Diwali



Wish u a Happy Diwali to all my friends,followers and visitors.






Saturday, October 30, 2010

தீபாவளி அலங்கார தட்டு

தேவையானவை

பளாஸ்டிக்,தெர்மகோல்,எவர்சில்வர் எதாவது ஒரு தட்டு
கலர் டிஷ்யூ பேப்பர் அல்லது வெல்வட் துணி அல்லது பேப்பர்
க்ளூ
பழைய சிடி
விளக்கு ( அகல்விளக்கு, மெழுகுதிரி, சந்தன கிண்ணம்,குங்கும சிமிழ்) ஏதுவானலும் ஒன்று
கத்தரிகோல
அலங்கார மணிகள், அல்லது சமிக்கி,குந்தன், முத்து

செய்முறை

தட்டை டிஷ்யூ பேப்பரில் வைத்து வட்டமாக வெட்டி எடுக்கவும்.
துணியிலானும் சரி எதுவானலும் அந்த அளவில் வெட்டி வைக்கவும்.
தட்டில் பசை நல்ல தடவி வெட்டிய துணி அல்லது டிஷ்யூவை ஒட்டி காயவிடவும்
அதில் நடுவில் சிடியின் பின்புறம் பசை தடவி ஒட்டி காயவிடவும்.
சிடியின் நடுவில் மேல் பாகத்தில் ஒட்டை இருக்கும் இடத்தில் அதில் விளக்கு, அல்லது மெழுகுதிரி,கிண்ணம், அல்லது குங்குமசிமிழ் எது வேண்டுமானலும் வைத்து காயவிடவும்.
காய்ந்ததும் அதில் நம் கற்பனைகேற்ப்ப மணிகள்,குந்தன் கற்கள்,
முத்துகள் ஒட்டி நன்றாக காய்விடவும்.
விருந்தினர்களுக்கு பரிசாகவும், நம் வீட்டு பண்டிகைகளுக்கு உபயோகிக்கவும் செய்யலாம்.
பார்க்க நன்றாக பளிச் என்று மின்னும் அலங்காரத் தட்டு ரெடி.

Thursday, October 28, 2010

பீன்ஸ்&ப்ளம்ஸ்



எங்க வீட்டு தோட்டத்தில் இந்த வருடம் விளைந்த பீன்ஸ் & ப்ளம்ஸ்

Saturday, October 16, 2010

நவராத்திரி






இந்த வருட நவராத்திரி எங்க வீட்டு கொலு.
என் சின்ன மகள் பார்க் செய்தாள்.
இன்று ஒன்பதாம் நாளாகிய சரஸ்வதி, ஆயூத பூஜை செய்வது வழக்கம்.
காலையில் குளித்து தேவிக்கு சர்க்கரை பொங்கல், கொண்டகடலை சுண்டல், வடை, பாயசம் செய்து எல்லா புத்தகஙகளும், ஆயூதங்கள்,சங்கித வாத்தியங்கள், கார், போன்ற எல்லாவற்றுக்கும் குங்குமம்,மஞ்சள் இட்டு பூக்கள்,அட்சதை போட்டு நிவேதனம் செய்து வருகிறவர்களுக்கும் அந்த ப்ரசாததை கொடுத்ப்பது வழக்கம்.
விஜயதசமி நாளாகிய நாளை குளித்து பூக்கள் அட்சதை போட்டு பூஜையில் வைத்திருக்கும் புஸதகத்தை எடுத்து ஒரிரண்டு வரிகள் படித்து, பாட்டு பாடி
பாயசம், பழம் போன்றவை வைத்து நிவேதனம் செய்து, கொலுவுக்கும், மங்கல ஆரத்தி எடுத்து ஒரிரண்டு பொம்மைகளை படுக்க வைப்பது வழக்கம்.
பின் அதை எடுத்து உள்ளே வைத்து அடுத்த முறை எடுத்து இதே போல் கொண்டாடுவது வழக்கம்.

Wednesday, October 13, 2010

சிலி தாமிர சுரங்க மீட்பு




ஆகஸ்ட் 5 தாமிர கனிமச் சுரங்கம் 700 மீட்டர் ஆழத்தில் இருந்தபோது சுரங்கம் மண்,பாறை,கல் போன்றவர்றால் மூடிகொண்டது.

சுரங்கத்தில் சிக்கி கொண்டு க்டந்த 69 நாட்களாக மண்னுக்குள் புதையுண்டு இருந்த 33 பேரை சிலி நாடு அரசு நல்ல விதமாக 33 பேரையும் மீட்டனர்.


சுரங்கத்தில் இருந்த 33 பேர்களுக்கு அவரவர் சொந்தகளின் அன்பு கடிதங்கள், மருந்துகள்,
குடிநீர், திரவ உணவு போன்றவற்றை அனுப்பி அவர்களை காப்பாற்றி கொண்டும் மனதுக்கு
தெம்பும், உற்சாகமும் அளித்து கொண்டு இருந்தார்கள்.
அதில் ஒருவர் தலைவராக நியமித்து அவர சொல்வதை கேட்டு ஒற்றுமையாக நடந்து கொண்டார்கள்.2 பேரின் உணவை 17 நாடகள் வைத்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.

சிலி நாட்டு அரசு இதை வெற்றிகரமாக நடத்த்தினார்.
செபாஸ்டின் பினேரா சீலி நாட்டு தலைவர் இதை நல்ல வெற்றிகரமாக் எல்லோரையும் மீட்டு
அந் நாடு ஒரு ரிக்கார்டை பதிப்பித்தது.
இந்த ஒரு எலிவேட்டர் (Capusule) நீளமான காஜ் செய்து அதை
பத்திரமாக கீழே இற்க்கி முதலில் ஒரு டாக்டர்ரை அனுப்பி பரிசோதனைகள் நடத்தி பின் ஒவ்வொருத்தராக கீழே இருந்து மேலே ஏற்றி வந்தது.

சிலி நாடு வெற்றிகரமாக எல்லா சுரங்க தொழிலாரர்களையும் மீட்டனர்.
அவரவர் சொந்தகாரகளை பார்த்து ஆனந்த கண்ணிரும் தழுவலுமாக கண்னுக்கும், மனதுக்கும்
சந்தோஷமாக இருந்தது.
33 பேரும் வந்ததும் அந்நாட்டு தேசிய கீதம் பாடி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
இதை உலகம் முழுதும் பாராட்டுகள் தெரிவித்தார்கள்.

Monday, October 11, 2010

தேவதையில் விஜிஸ் க்ரியேஷன்ஸ்


தேவதை இதழில்
இந்த மாத தேவதை இதழில் என் வலைதளம் வந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செதியை தெரிவித்து கொள்கிறேன்.

தேவதை இதழை நான் விடாமல் படித்து வருகிறேன். இந்தியாவில் இருந்து என் சிஸ்டர் தொடர்ந்து இதுவும், மங்கையர் மலரும் அனுப்புவிடுவாங்க.நானும் இதுவரைக்கும் விடாமல் விரும்பி படிக்கும் இதழ்கள்.


தேவைதை ஒரு நல்ல இதழ் என்பதை நான் சொல்லி தெரிவதை விட உங்க எல்லோருக்கும் தெரிந்திருக்கும், எல்லா இல்லதரசிகளுக்கும், பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரு நல்ல பயனுள்ள மாதமிருமுறை இதழாக மலருகிறது. நல்ல பயனுள்ல தகவல்கள், செய்திகள் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும் இந்த தேவதை.
இதில் வெளியிட்ட் திரு நவநீதன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அதில் என்னுடைய்ய வலைதலமும் வந்துள்ளது என்று கேட்டதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நிங்க எல்லாரும் பார்த்து படித்துவிட்டு சொல்லுங்க. என் தோழி விஜி க்ராப்ட்ஸ் விஜி அவரகள் சொன்னாங்க. அவர்களுக்கும் என்
நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.





Friday, October 8, 2010

Happy Birthday





இன்று என் மகள் அக்‌ஷ்யாவின் 10 வது பிறந்தநாள்.

எல்லோரையும் என் மகளும் நாங்களும் பார்டிக்கு வாங்க என்று அன்புடன் அழைக்கிறோம்.
கேக்+பார்டி.
என் மகள் இப்ப பிறந்தது போல் இருந்தது, அதற்க்குள் காலங்கள் வேகமாக போய்விட்டது போல் தோன்றுகிறது.
அவளுக்கு என் சின்ன பென் திவ்யாவும் நானும் சேர்ந்து ஒரு கார்ட் செய்து பரிசளித்தோம்.
இதோ அது தான் இது.
உங்க எல்லோருடைய்ய வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் எப்பவும் என் மகளுக்கு கிடைக்க வேண்டும் என்று நானும் என் மகளும் உங்க எல்லோருக்கும் மனமாற நன்றி கூறி கொள்கிறோம்.