Friday, March 18, 2011

பேப்பர் டேபிள் மேட்



என் மகள் அக்‌ஷ்யா தன் ஸ்கூலைல் ஒரு டேபிள்மேட் செய்து ஷோ& டெல்க்கு எடுத்து சென்றது.




Thursday, March 17, 2011

பேப்பர் கல்ர் பொம்மை



இது என் குட்டி பென் தன்னோட ஸ்கூலில் ஷோ & டெல் டேக்கு செய்து எடுத்து சென்றது.
நான் செய்த ஹெல்ப் கட் செய்து குடுத்தது. வரைந்தது + ஐடியா எல்லாம் என் மகள் திவ்யா அவளே சொல்லி செய்ததது.

இதை அவ ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் + டீச்சர் எல்லாரும் பார்த்து வாவ் எப்படி இது செய்தாய் என்று கேள்வி இதற்க்கு இவ சொன்னது அதற்க்கு தானே இன்றைக்கு நான் ஷோ & டெல் க்க்கு எடுத்துட்டு வந்திருக்கேன் பொறுமையா இருங்க என்று சொல்லி
ஸ்டெப் 1

தேவையானவை
கலர் சாட் பேப்பர் ( உங்களுக்கு பிடித்தமான கலர்)
மார்க்கர்ஸ் அல்லது க்ரேயன்ஸ்
கத்தரிகோல்
பென்சில்
க்ளு

ஸ்டெப் 2

முதலில் கலர் பேப்பரில் விரும்ப்பமான அளவில் பென் உருவத்தை வரையவவும்
பின் எந்த விதமான் ட்ரெஸ் போட போறிங்களோ அதே போல் வரைந்து கட் செய்து
ஒரு கலர் பேப்பரில் உருவத்தை வரைந்து அதன் மேல் ஒட்டி நன்றாக ட்ரிம் செய்து விடவும்.
பின் தலைக்கு கருப்பு, லிப்ஸுக்கு ரெட் ஷுவுக்கு உங்களுக்கு பிடித்த கலர் என்று சொல்ல்லி
முடித்தாள். எல்லாரும் ஆ இவ்வளவும் நீயா செய்தாய் என்றதும் என் அம்மா கட் செய்து தந்தாங்க வரைந்தது நான் ஆனல் கொஞ்சம் ஸிக்ஸாக்காக இருந்தது அம்மா அதை நல்ல ட்ரிம் செய்து தந்தாங்க.
எனக்கு பிங் ரொம்ப பிடிக்கும் அதனால் நான் செலக்ட் செய்த ட்ரஸ் கலர்ஸ் பிங்.
தாங்ஸ் ப்ரெண்ட்ஸ் என்று சொல்லி முடித்தாள்.

பார்க்க ரொம்ப சிம்பிள் ஆனால் 4 வயது குட்டிஸ் செய்வது என்றால் கொஞ்சம் இல்லை நிறய்யவே பொறுமை தான்.

இந்தாங்க நிங்களும் பாருங்க.

இந்த மாதிரி கட் செய்து ஒட்டி செய்த டாலுக்கு ஏதாவது பேர் இருக்குமா என்று தெரியல்லை தெரிந்தால் சொல்லுங்க.


Tuesday, January 25, 2011

Snow Stom Day








போனவாரம் 8” ஸ்னோ + ஸ்ட்ராம் வந்து அந்த ஸ்னோவே இன்னும் கரைந்த பாடில்லை,
அதற்க்கும் மீண்டும் ஸ்னோ இன்று, நாளையும் இருக்கு.
டெம்ப்ரேச்சர் நேற்று 0 டிகிரி, இன்று -5, நாளை -6 வெளியில் போகமுடியவில்லை,
பள்ளிகள் எல்லாம் விடுமுறை.
வேலைக்கு செல்பவர்கள் பாதிபேர் வீட்டிலிருந்து வேலை பார்க்கிறார்கள்.
நான் எங்கள் வீட்டின் முன் இருக்கும் ஸ்னோவை கொஞ்சம் க்ளிக் செய்து கிடைத்ததை உங்களுக்காக இங்கே கொஞ்சம் எட்டி பாருங்க.
பார்த்து குளிர போகுது.

Friday, January 14, 2011

பொங்கல் வாழ்த்துக்கள்





பொங்கல் என்றாலே என் அம்மா எங்க வீட்டில் வைக்கும் பொங்கல் தான் நினைவுக்கு வரும்.
காலையிலே எழுந்து அம்மா வாசல் தெளித்து நல்ல பெரிய பொங்கல் பானை கோலம் போட்டு சுற்றிலும் அழகான சின்ன கோலங்கள் எல்லாம் போட்டு எங்க எதிர்வீடு பக்கத்து வீடு எல்லாரும் அவங்க வீட்டு வாசலில் முதலில் கோடு போடுவாங்க, அதற்க்கும் நல்ல பெரிய கலர்புல்லா கோலம் போட்டு யாரது நல்ல பெரிய கோலம் என்று பார்த்து அதை ரசிப்பதில் ஒரு அழகு.அதை படம்பிடித்து எல்லோரும் வரிசையா போயி பார்பார்கள்.
பின் அம்மா நல்ல அழகா முற்றத்தில் பெரிய கோலம் போட்டு சிவப்பு மன்னால் அலங்கரித்து, சூரியன், சந்திரன், கரும்பு, பொங்கல் பானை போட்டு அதில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு நைவத்தியம் செய்து அதை எல்லாரும் சாப்பிட்டு மகிழ்வதில் எல்லையில்லா ஆனந்த்தம்.
இப்ப இங்கு ஸ்னோவில் எங்கும் கோலமும் போட முடியாது முற்றத்தில் வைக்கவும் இயலாத விஷ்யம் பொஙல் வீட்டின் கிச்சனில் வைப்பது தான் பின் சாமிபடங்கள் முன் வைத்து நைவேத்தியம் செய்வது தான் அவ்வளவு தான். அதுவும் இந்த தடவை வீகெண்டில் வந்த்தால் எல்லா நன்பர்கள் குடும்பங்களோடு பொங்கல் கெட் டு கெதர். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொன்டாட்டம்.
தமிழ் சங்கத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் அதில் என் குழந்தைகளின் மெட்லி நடனம் இருக்கிறது. இங்கு பொங்கல் விழா பெப்ரவரி 5 கொண்டாடுகிறார்கள் அதர்க்கு டான்ஸ் ப்ராக்டிஸ் போயிகொண்டிருக்கு. ranoli competitions irukku.ஆர்ட்,competitions,unmute,spelling bee, kavithai,vinadi vina etc..
நிங்களும் எல்லோரும் பொங்கல் கொண்ட்டாட என்னோட இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Saturday, January 1, 2011

பென்சில் ஹோல்டர்


என் மகள் திவ்யா செய்தது.

மில்க் பாக்ஸ்(அட்டைபெட்டி)யில் செய்த்தது.

தேவையானவை


பழைய மில்க் கார்டன் பாக்ஸ்
அல்லது ஜூஸ் பாக்ஸ் - 1
கத்தரிக்கோல்
க்ளு
பழைய மாக்ஸின் படங்கள்


பென்ஸில்,பேனா மற்றும் எல்லாம் போடலாம்.

செய்முறை

மில்க் கார்டன் பாக்ஸை நன்றாக சுத்தம் செய்து காய வைக்கவும்.
அதை நமக்கு வேண்டிய அளவில் வெட்டி வைக்கவும்.
உள்ளே க்ளு தடவி மாகஸின் பேப்ப்ரரை ஒட்டிவிடவும்.
வெளியிலும் அதே போல் க்ளு தடவி மாகஸின் பேப்பரை ஒட்டி காய விடவும்.
காய்ந்த பின்பு 3 டி வைத்து டிஸைன் வரைந்தும் வைக்கலாம்.
ஸ்டோன்ஸ் ஒட்டலாம்.

இது ஜஸ்ட் மாகஸின் பேப்பரை ஒட்டி மேலே ஷைனிங் பேப்பர் ஒட்டிவிட்டது.
சிறு குழந்தைகளுக்கு க்ராப்ஸ் செய்ய கற்று கொடுக்கலாம்.
இதில் பேனா, பென்ஸில், மார்க்கர், க்ரயான் போன்றவை போட்டு வைக்கலாம்.


Friday, December 31, 2010

2010-2011 தொடர்பதிவு

2010

என் சின்ன மகள் முதன் முதலில் பள்ளிக்கு சென்றது மிகவும் சந்தோஷமானது.
என் குழந்தைகள் போட்டிகளில் கலந்து பரிசுகள் வென்றது.
நான் பெஃட்னாவில் கலந்து கவிஞர் தாமரையிடம் சான்றிதழ் பெற்றது.
என்னிடம் பயின்ற மாணவிகள் பாட்டு போட்டியில் கலந்து பரிசு வென்றது.
என் குடும்பத்தோடு கானடா சென்று விடுமுறை நல்ல சந்தோஷமாக கழ்த்த்து.
எனக்கு தமிழ் குடும்பத்தில் பரிசு கிடைத்தது.
என் குழந்தையின் ஆர்ட் பெஃட்னா புஸ்தகத்தில் வந்தது.
என் குழந்தைகளுக்காக டிஸ்னி சென்று அவங்களோட சந்தோஷத்தை பார்த்து மகிழ்ந்தது.
என் வலதளம் தேவதையில் வந்தது.
எனக்கு வலதளம் வழி நல்ல புதிய நிறய்ய நட்புக்கள் கிடைத்தது என்றென்றும்
மறக்க முடியாதது.
என் தொடர்பதிவை ஏற்று தொடர்ந்த என் நட்புலகத்தர்ரை மறக்க முடியாது.
எனக்கு நிறய்ய அவார்ட்கள் குடுத்து என்னையும், என் வலைதளத்தையும்
கௌரவபடுத்தி மேலும் புத்துணர்ச்சி தந்து எழுத தூண்டிய என் நண்பர்களை என்றும்
மறக்க முடியாதது.
நிறய்ய பாலோவர்ஸ் வந்து போவதை நினைத்து பெருமைபட்டது.

2011.

வாழ்வில் நோய் நொடியின்றி, சந்தோஷமாக வாழ இறைவன் அருள் கிடைக்க
வேண்டும்

என் குழந்தைகள் நன்றாக படித்து பெரிய ஆளாக வேண்டும்.


என் வலையுலக நண்பர்களை நேரில் பார்க்க ஆசை.

நிறய்ய புதிய விஷய்ங்களை கற்று கொள்ள வேண்டும்.

மேலும் மேலும் நிறய்ய பலோவர்ஸ் வர வேண்டும்.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Friday, December 10, 2010

"2010" வருட டைரி மற்றும் ‘2011-ல் நீங்கள் சாதிக்க அல்லது விரும்புகிற எண்ணங்கள்’



"2010" வருட டைரி மற்றும் ‘2011-ல் நீங்கள் சாதிக்க அல்லது விரும்புகிற எண்ணங்கள்’ எல்லோருக்கும் புது வருடம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
அதிலும் சின்னவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் ஏதாவது
ஒன்றை மனதில் நினத்து கொண்டு இந்த வருடம் கண்டிப்பா எப்படியாவது
செய்ய வேண்டும் என்ரு ஒரு உறுதி மொழி வைத்து கொளவது வழக்கம்.
உதாரணத்துக்கு சில பேர் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நான்
இன்றில் இருந்து இனிமேல் கண்டிப்பா புகை பிடிப்பதை அறவே நிறுத்திட்டேன்,
சில பேர் இன்றில் இருந்து நான் உடற்பயிற்ச்சி தவறாமல் கடைபிடிக்க போகிறேன்.
என்று எத்தனை விதமோ நம்மிடம் இருக்கும்.

"2010" வருட டைரி மற்றும் ‘2011-ல் நீங்கள் சாதிக்க அல்லது விரும்புகிற எண்ணங்கள்’

2010 ஜனவரியில் இருந்து டிசம்பர் 2010 வரையில் நமக்கு எல்லார்க்கும்
ஏதாவது நல்ல சம்பவங்கள் அதுவும் மறக்க முடியாதவை இருக்கும்
இந்த தொடர் பதிவை எனக்கு ஒரு தோழி இ மெயிலில் எழுத சொல்லி டிசம்பர் 28 க்குள்
முடிக்க கேட்டு கொண்டிருக்கிறார்கள்.

நானும் இதை ஏன் என் வலைதள நட்புலக எல்லோருக்கும் எழுத அழைக்ககூடாதென்று யோசித்து உடனே அதை இனைத்து உங்க எல்லோரையும் இங்கே அழைக்கிறேன்.

.எதிர்பாராமல் நமக்கு சில நல்லவை கிடைத்திருக்கும் அல்லது அடைந்திருப்போம்
1. நமக்கு பிடித்த நல்ல விஷயங்கள்(
2. மறக்க முடியாத சம்பவம்( சந்தோஷமானது)
3. மகிழ்ச்சி தந்த அல்லது பிடித்த பொழுதுபோக்கு
4. அன்பு அல்லது பரிசுகள்
5. குழந்தைகள் இருந்தால் அவர்களின் மகிழ்ச்சியான விஷயம்
(குழந்தை இல்லாதவர்கள் கவலை வேண்டாம்,அவர்களுக்கு பிடித்த குழந்தைகளின்)
6. பிடித்த நல்ல மனிதர்கள்( அரசியல்வாதி, கலைஞர்கள்,உறவினர்கள்,நன்பர்கள்,நன்பிகள்)
7. பிடித்த உணவுகள் புதியதாய் ஏதாவது ட்ரை செய்து சாப்பிட்டது(புதிய ரெஸ்ட்ராண்டில்
சாப்பிட்ட அனுபவம்)
8. பிடித்த அல்லது மற்க்கமுடியாத இடங்கள்
9. வாழ்க்கையில் இந்த வருடத்தில் நடந்த மனதை தொடுகிற சம்பவங்கள்.(நல்லது,கெட்டது)
10 2010 ல் நிங்கள் சாதிக்க அல்லது விரும்புகிற எண்னங்கள்.

எல்லா நட்புலக நண்பர்களும், நண்பிகளும் வந்து கலந்துகொண்டு எழுதினால் மற்ற எல்லோரும்
தெரியாத, தெரிந்த நல்ல விஷயங்களை நாமும் தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு.

இதில் கலந்து கொள்ள

ராமலஷ்மி
ஸாதிகா
குறிஞ்ஞி
மல்லிக்கா
ஹூசைனம்மா
ஜலீ
நாட்டாமை
ஜெய்லானி
கவிதா
ஆஸியா

எனக்கு 10 பேர் தான் அழைப்பு குடுக்க சொல்லி ரூல்ஸ் குடுத்திட்டாங்க.
அதனால்
எனக்கு தெரிந்த 10 பேரை நான் இதில் எழுதுகிறேன்.
அவர்களை உங்களுக்கு முடிந்தால் தெரிந்தவர்களை தொடர் அழைப்புக்கு அழைக்கலாம்.

அவர்கள் இதோ

மேனகா
மஹி
அபி அப்பா
நாஞ்ஞில் மனோ
ஹைஷ்
ஆனந்தி
குறிஞ்ஞி
மனோ அக்கா
ஜெயஸ்ரீ
பவித்ரா
காஞ்சனா
வானதி
கவிதா
தேனம்மை
அஸ்மா



யார் யார் எழுதறிங்களோ அவர்கள் அவர்களுக்கு தெரிந்த 10 பேர்கள் தொடர் பதிவுக்கு அழைக்கவும்.