Tuesday, March 2, 2010

நவராத்திரி கொலு

எங்க வீட்டு கொலு






ரட்டாசி மாதம் அமாவாசை கழித்து மறு தினம் நவராத்திரி பண்டிகை ஆரம்பமாகும்.
கொலு வைப்பதானால் அமாவாசை அன்று படி கட்டிவிட்டு பொம்மைகளை எடுத்து வைத்து அன்று முதல் நவராத்திரி முடியும் வரை தினசரி மாலையில் தெரிந்தவர்களை அழைத்து வெற்றிலை,பாக்கு,மஞ்சள், குங்குமம்,பழம், இவைகளுடன் ஏதாவது ஒரு சுண்டல் வைத்து கொடுப்பது வழக்கம். தற்ப்போது எல்லா நாடுகளிலும் வெற்றிலை கிடைப்பதில்லை அதனால் அவரவர் வசதிகேப்ப, ஒரூ கூடை, அல்லது தட்டு, பௌள், வீட்டிற்க்கு உபயோகமான பொருள், அலங்கார பொருள் என்று ஏதாவது ஒரு பொருளை வைத்தும் குடுக்கிறார்கள்.
கொலு வைக்கும் முறை
படிகள் வைக்கும் எண்கள் 3,5,7,9 என்ற ஒற்றை வரிபடி வைப்பது
அதிலும் ஒரோ படிகளுக்கு ஒரோ ததுவ குணங்களோடு வைப்பது உண்டு.
முதல் மூன்று தினங்க்ள் துர்காதேவியை வணங்குவது
அதன் பின் மூன்று தினங்கள் லஷ்மி தேவியை வணங்குவது
கடைசி மூன்று தினங்கள் சரஸ்வதி தேவியை வணங்குவது
பத்தாவது தினம் விஜயதசமி.
சரஸ்வதி பூஜை
கொலு வைத்தாலும், வைக்காவிட்டலும் எல்லா வீடுகளிலும் சரஸ்வதி பூஜை செய்வது வழக்கம்.
சரஸ்வதி படத்திற்க்கு ஒரு பச்சை ரவிக்கை துணியை வத்து அதில் புஸ்தகஙகள்,பேனா,லேட்டாப்,பென்சில்,சங்கித வாத்யங்கள், வைத்து அதற்க்கு சந்தணம்,மஞ்சள்,குங்குமம் வைத்து பூக்களாள் பூஜை செய்வார்கள்.
வீட்டில் இருக்கும் மேஜை,நாற்காலி,பீரோ,நடைவாசல்,மிஷின், எல்லாவற்றிர்கும் சந்தனம்,குங்கும வைப்பார்கள்.
நைவத்யதம் செய்து அதற்க்கு உளுந்து வடை, பாயஸ்ம், அவரவர் வீட்டு வழக்க்கப்டி சரிக்ரை பொங்கல், கொண்டகடலை சுண்டல்,செய்து நைவத்யம் செய்து வீட்டிற்க்கும் வரும் சுமங்கலிகளுக்கும்,குழந்தைகளுக்கும் வெற்றிலை பாக்கு,ம்ஞ்சள், வைத்து குடுத்து புண்ணியத்தை பெறுவது பழக்க வழக்கம்.
தற்ப்போது சனி,ஞாயிறு விடுமுறையாதலால் அதை ஒரு கெட் டு கெதர் போல் வைத்து அழைப்பது வழக்காமாகிவிட்டது.
விஜய த்சமி
சரஸ்வது பூஜ்ழை மறு நாள் காலையில் புனர் பூஜை செய்து நைவத்யம் செய்து பூஜையில் இருந்து புத்தகத்தை எடுத்து படிப்பது வழக்க்ம்.
அன்றைக்கு சிறு குழந்தைகளை வித்யா ஆரம்பம் என்று அன்று படிக்க வைப்ப்து வழக்கம், பாட்டு,டான்ஸ், புதியதாக ஆரம்பிக்க நல்ல் நாள் அன்று சேர்ப்பது வழக்கம், குருவிற்க்கு தட்சினையோடு ஆரம்ப கல்வி தொடங்கி வைப்ப்து வழக்கம்.
நைவத்யம் செய்துவிட்டு,கொலுவுக்கு மங்கலை ஆரத்தி எடுத்து விட்டு ஒரு சில பொம்மைகளை படுக்க வைப்பது வழக்கம்.
மறு நாள் செவ்வய்,வெள்ளி இல்லாமல் இருந்தால் மீண்டும் பொம்மைகளை எடுத்து வைத்து விடுவார்கள்.
இதில் அவரவர் குடும்படி மாற்றங்களோடு இருக்கும். எனக்கு தெரிந்ததை எங்க வீட்டு முறை படி எழுதியிருக்கேன்.

2 comments:

Jaleela Kamal said...
This comment has been removed by a blog administrator.
Vijiskitchencreations said...
This comment has been removed by the author.