
மக்களே கெதியா வாங்கோ. இந்த வருடம் நம்ம வீட்டில் தோட்டம் போட்டாச்சு. இனி இதெல்லாம் எடுத்து மன்னில் போடனும் விளைஞ்சதும்
எல்லாருக்கும் குடுத்திடலாம். என்ன யாருக்கெல்லாம் வேனுமோம் முதல்ல வாங்க வந்து எது வேனும் என்று சொல்லுங்க.
காய்கறிகள்
ஸ்ட்ராபெர்ரி,தக்காளி, குடமிளகாய், கத்தரிக்காய், பீன்ஸ்,வெண்டை இவ்வள்வு தான் இருக்கு.
பூக்கள். சூர்யகாந்தி, ரோஸ்,மார்னிங் க்ளோ, ப்யூரி எல்லாம் இருக்கும்
வாழை, முல்லை,
தோட்டம் போட முதலில் ஒரு பெரிய் இங்கு அந்த செட்டே கிடைக்கும்
இல்லை என்றால் ஒரு பெரிய ப்ளாஸ்டிக் ட்ரே எடுத்து அதில் அங்க்ங்கே சிறு துளைகள் இட்டு முதல் 1 இன்ஞ் மன் போட்டு கொஞ்சம் தண்ணிர் தெளித்து மீண்டும் இங்கு செடிக்கு என்று இயற்க்கை உரத்தோட மண் கிடைக்கும் அதை போட்டு அதன் மேல் திரும்ப 1 “ மன் போட்டு நல்ல அரை இன்ஞ் குழிவாக எடுத்து விட்டு அதில் விதைகள் தூவி மீண்டும் 1 “ மன் போட்டு மூடி ஒரு அட்டையில் என்னவெல்லாம் விதைகள் என்று எழுதி வைத்தால் மண்னில் எடுத்து நடும் போது சௌகரியமாக இருக்கும்.
தண்ணிர் தெளித்து வெயில் வரும் இடத்தில் வைக்கவும். வெளிநாட்டில் வெயில் வராதவர்கள் வசிக்கும் இடம் என்பதால் இந்த முறை இல்லை என்றால் நேரடியாகவே மண்ணில் போடலாம். இங்கு வெயில் வருவது லேட் அதனால் முதலில் இந்த மாதிரி போட்டு கொஞ்சம் முளைக்க தொடங்கியதும் அதை எடுத்து மண்னில் நல்ல 1” குழித்து அதில் இயற்க்கை மண் போட்டு இந்த செடியை எடுத்து ஒரு செடிக்கும் அடுத்த செடிக்கும் 2” இடைவெளிவிட்டு நடவும். இரண்டு நாள்களுக்கு ஒரு தடவை நல்ல தண்னிர் விட்டால் வளரும். கொடி பயிர் என்றால் அதற்க்கு தகுந்தார் போல் வேலி கொடி கட்டி விட்டால் நல்ல வளரும்.
வளர்ந்ததும் படங்கள் போடுகிறேன்.
நிங்க எல்லாரும் உங்க வீட்டு தோட்டகலையை பற்றி சொல்லுங்க.