
Tuesday, July 27, 2010
Friday, July 23, 2010
க்ராப்ட்ஸ்(Summer Playdate Crafts)
சம்மர் விடுமுறையானதினால் என் மகள் தன் தோழிகளுடன் ப்ளேடேட் அன்று செய்த சில சின்ன க்ராப்ட்ஸ் இதோ, பார்த்துவிட்டு சும்மா போன எப்படி நிங்களும் ஏதாவது உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க, கேட்டால் சந்தோஷமா இருக்கும்.
இங்கு சம்மர் விடுமுறை நடக்கிறது. அதற்க்கு பிள்ளைகள் தங்களுடன் படிக்கும் தோழிகளுடன் கலந்தோசித்து ஒரு நாள் உன் வீட்டில் நான் வருவேன் ஒரு நாள் நீ என் வீட்டிற்க்கு வா என்று பேசி நன்றாக ப்ளான் செய்து என்னவெல்லாம் விளையாடலாம் எங்கெல்லாம் போகலாம் என்று கலந்தோசித்து செய்வது வழக்கம்.
முதலில் என் மகள் தன் தோழி விட்டிற்க்கு சென்றால் அங்கு வேற தோழிகளும் வந்து எல்லாரும் அவங்க வீட்டில் நீச்சல் குளம் இருக்கு அங்கு நன்றாக விளையாடிட்டு சாப்பிட்டு அடுத்தது யார் வீட்டில் என்று முடிவெடுப்பார்கள்.
அடுத்து எங்க வீடு வந்தாங்க எல்லாரும் சேர்ந்து முதலில் க்ராப்ட்ஸ், அடுத்து
பெயிண்டிங்,அடுத்து slide,sweing,bouncing, soccer,skipping,insturmental music,story telling lunch என்று ப்ளான் அதில் முதலவதாக க்ராப்ஸ்.
என் மகள்+அவ தோழி சேர்ந்து செய்த இந்த க்ராப்ஸ்.
ஒர்காமி பேப்ப்ரில் கப்ஸ்
செனியல் ஒயரில் ஹனி பி
செனியல் ஒயரில் ப்ளவர்
செனியல் ஒயரில் குரங்கு
பீட்ஸில் பேரேஸ்லெட்
தேவையானவை
Chenille Sticks
Scissors
Glue
Card Stock or construction paper
Tuesday, July 20, 2010
Strawberry Picking Birthday Party
ராஸ்பெர்ரி பர்த்டே பார்டி
என் மகள் திவ்யா ஜூன் 30 - 4 வது பிறந்த நாளை அவ பள்ளி தோழிகள்,தோழர்கள், குடும்ப நண்பர்களோடு ராஸ்பெர்ரி தோட்டத்தில் வைத்து இனிய பிறந்தநாள் கேக் வெட்டி சந்தோஷமாக கொண்டாடினோம்.எல்லாரும் வந்து வாழ்த்தியதை நாங்கள் எல்லாரும் மகிழ்ச்சியோடு கொண்டடினோம்.
என் மகள் ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தில் தான் வைக்க வேண்டும் என்று தன்னோட விருப்பத்தை 4 மாதங்களுக்கு முன்பே தெரிவித்தால், ஆனால் எல்லா இடமும் விசாரித்ததில் சீசன் முடிந்து இப்போ ராஸ்பெர்ரி தான் என்று எல்லா இடமும் சொல்லிவிட்டங்க ஆனால் வேறு வழியில்லாமல் அவளை சமதானம் செய்து ராஸ்பெர்ரி தோட்டதில் வைத்து கொண்டாடினோம்.மிக நன்றாக இருந்தது.
Hey Ride, Moon Bounce, Animal Feeding,Rasberry Picking,
எல்லாரும் வந்தவுடன் முதல் ஹே ரெய்ட்(வைக்கோல் நிறய்ய வைத்து ஒரு பெரிய ட்ராக்டர்) அதில் அந்த தோட்டம் முழுவதும் சுற்றி காட்டுவாங்க.(எல்லாரையும் ஒரே ட்ரிப்பில்) உண்மையிலே அது ரொம்ப நன்றாக இருந்தது. அந்த ட்ரக்கில் எல்லாரும் குழந்தை முதல் பெரியவர் வரை ஒன்றாக அமர்ந்து
எல்லாரும் வந்தவுடன் முதல் ஹே ரெய்ட்(வைக்கோல் நிறய்ய வைத்து ஒரு பெரிய ட்ராக்டர்) அதில் அந்த தோட்டம் முழுவதும் சுற்றி காட்டுவாங்க.(எல்லாரையும் ஒரே ட்ரிப்பில்) உண்மையிலே அது ரொம்ப நன்றாக இருந்தது. அந்த ட்ரக்கில் எல்லாரும் குழந்தை முதல் பெரியவர் வரை ஒன்றாக அமர்ந்து
பாட்டு டான்ஸ், ஸ்டோரி டெல்லிங் என்றும் எல்லாம் அதில் இருந்து கொண்டே பாடி, ஆடி ஊர்வலமாக சுற்றி வந்து பின்பு மூன் பவுன்ஸிங், ஆடு, கோழி,பேர்ட்ஸ்,முயல இவைகளுக்கு எல்லாம் ஆகாரம் குடுப்பது அதுவும் இங்கு ஒரு விளாயாட்டு போல் ஒரு சின்ன பௌலில் எல்லா ஸீட்ஸ் எல்லாம் போட்டு எல்லா குழந்தைகளுக்கும் கையில் குடுத்து அவங்களே போய் அதன் வாயில் குடுக்கவேண்டும். அது எல்லா குழந்தைகளும் குடுத்து என்ஞாய் பன்னினாங்க. அடுத்து டிபன், ஆப்பிடைசரில் ஆரம்பித்து,சமோசா, சிப்ஸ், குக்கிஸ் என்று அதை முடித்ததும் பீட்ஸா, என் தோழிகளின் சில பேரின் பெற்றோர்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாங்க அவங்க சில பேர் பிட்ஸா சாப்பிட மாட்டர்கள் அவர்களுக்க்கா வீட்டில் வெஜ் ரெடிமேட் சேவை(அதில் எல்லா காய்கறிகளும் சேர்த்து சாட் மசாலா போட்டு , லெமன் ஜூஸ்) சேர்த்து செய்திருந்தேன் அதுவும், டீ, குளிர் பானங்கள், லெமனேட், போன்றவை எல்லாம் சாப்பிட்டு பின்பு ஒரிரண்டு விளையாட்டுகள் விளையாடி கேக் கட்டிங் முடிந்து இறுதியில் ராஸ்பெர்ரி பறிப்பது அதுவும் எல்லாரும் ஒன்றாக அந்த தோட்டதில் வேலை பார்க்கும் ஒரு கெய்டை நமக்கு கூட அனுப்பி எந்த வரிசையில் நாம் பறிக்கவேண்டும் எவ்வளவு நேரம் பறிக்க வேண்டும் என்பதை சொல்லி அழைத்து சென்றார்கள், எல்லாருக்கும் ஒரு கூடை குடுத்து அதில் எவ்வளவு நிரப்ப முடியுமோ நிரப்பலாம்.
குழந்தைகளுக்கு எல்லாம் நன்றி சொல்லி எல்லா குழந்தைகளுக்கும் வந்து கலந்துகொண்டு என் மகளின் பர்த்டே நினவாக சின்ன பரிசுகளை எல்லார் கையிலும் கொடுத்து நன்றியை தெரிவித்து நாங்களும் எல்லா பரிசுகள், மீதியிருக்கும் கேக், பீட்ஸா எல்லாவற்றையும் முடிந்தவரைக்கும் அங்கு வந்தவர்களுக்கே யார் யாருக்கெல்லாம் கேக், பீட்ஸா, சமோசா வேண்டுமோ எடுத்து கொள்ளுங்க என்று சொல்லி வேண்டியவர்கள் எடுத்துவிட்டு மீதமானதை நாங்களும் வீட்டிற்க்கு எடுத்து வந்தோம்.நன்றாகவே இருந்தது.
Subscribe to:
Posts (Atom)