Tuesday, October 5, 2010

வீட்டிலேயே லைப்ரரரி







வீட்டிலேயே லைப்ரரி
புஸ்தகங்கள் நிறய்ய படிப்பவர்களுக்கும், வீட்டில் நிறய்ய புஸ்தகங்கள் இருந்தும் அதை அவசரத்திற்க்கு எடுப்பதற்க்கு அவதிபடுகிறவர்களுக்கும் இதோ இதே போல் இருந்தால் நாம் எடுப்பதற்க்கும், நம் அவசரத்திற்க்கு உடனே தீர்வு கிடைத்திடும்,

சிலர் வீட்டில் புத்தகங்கள் நிறய்ய வைத்திருப்பார்கள்.
அதை அழகாக லேபல், கூடை, ட்ரே போன்றவற்றில்
அடுக்கி வைக்கலாம்.
நிங்களும் இதே போல் செய்தால் புத்தகங்கள் அங்கும் இங்குமாக
கிடக்காமல் எல்லா புத்தகங்களும் ஒரே இடத்தில் இருக்கவும் செய்யும்.
அவரவர் வசதிகேற்ப்ப ஒரு அலமாரி, ஷெல்ப், ப்ளாஸ்டிக், மரம்
ஏதுவானலும்அதில் சின்ன ப்ளாஸ்டிக் ட்ரே அல்லது கூடை,
இதில் ஏதாவது ஒன்றை விருப்பதிற்க்கும்,வசதிக்கும் தகுந்தாற்போல் வாங்கி அதில் மார்க்கர், அல்லது பேனாவினாலோ வேண்டிய தலைப்புகள், முடிந்தால் சில புத்தகங்கள் தொடர் புத்தகங்களாக இருக்கும் இருந்தால் அதன் வரிசை படி 1 முதல் 8 வரை என்று எழுதி அதன் படி அடுக்கி வைத்தால் பார்க்கவும், படிக்கவும் வசதியாகவும் இருக்கும்.

குழந்தைகள் புத்தகங்கள்,

ஸ்கூல் ஹோம் வொர்க் புத்தகங்கள்

பெரியவர்கள் படிக்கும் புத்தகங்கள்

வாரா,மாத இதழ்கள்,

இப்படி அவரவர் வீட்டில் இருக்கும் புத்தகங்களை ஒழுங்கு முறையில் அடுக்கினால் எல்லாருக்கும் வசதியாக இருக்கும்.
இடம் இருந்தால் அந்த இடத்திலேயே உட்கார்ந்து படிக்க ஒரு சின்ன சேர்
இருந்தால் எடுத்து படித்து அங்கே மறக்காமல் எடுத்த இடத்திலே திரும்ப வைக்கவேண்டும் ( அது தான் இதில் கவனிக்க வேண்டியது) மாற்றி வைக்ககூடாது.

முடிந்தால் நிங்க படித்து முடித்த உங்களுக்கு தேவையில்லை என்றால் அதை லைப்ரரரிலே குடுக்கலாம் அல்லது பள்ளியில் கூட கேட்டு குடுக்கலாம்.மற்றவர்களும் அதை பயன்படுத்துவார்கள்.
இந்த முறை எல்லோருக்கும் பயன்படும்.

Sunday, October 3, 2010

க்யூபெக்கில் காந்திசிலை ( Gandhi Statue in Quebec)





கனடாவில் காந்தி சிலை
நம்ம காந்தி அவர்கள் எங்கும் இருப்பார் என்பது உறுதி எல்லாருக்கும்
தெரிந்து இருந்தாலும்,இந்த காந்தி ஜெயந்தி தினத்திற்க்கு நான் குறிப்பிட பெருமை படுகிறேன்.
நான் பார்த்ததை உங்க எல்லோருடனும் பகிர்ந்துக்க தோன்றியது.
இதோ கனடாவில் பார்த்தது.

இந்த சிலையை நாங்கள் கனடாவில் க்யூபெக் சிட்டி பார்லெமெண்ட் வளாகத்தில்
பெரிய தேச தலைவர்கள் சிலைகளை எல்லாம் பார்க்க முடிந்தது.
ஆனல் நம்ம காந்தி அவர்களின் சிலை நல்ல அழகான புத்தம் புது
தோற்றத்துடன் பார்க்க நன்றாக இருந்தது.
இந்த சிலையில் முன்ப ஆங்கிலத்திலும் பின்பு
ஹிந்தியிலும் முழு பெயர்,தோற்றம் மறைவு
எல்லாம் இரண்டு மொழிகளிலும் பொரிக்கபட்டிருந்தது.
இந்த சிலையின் முன் எங்கள் குடும்ப புகைபடம் ஒன்றும் எடுத்து கொண்டோம்.
என் குழந்தைகளுக்கு விளக்கி சொல்லி கொடுத்தோம்.
நம்ம அறியாமலே அந்த சிலையை பார்த்ததும் ஒரு கணம் நம் கால்கள்,கண்கள் எல்லாம் அப்படியே நின்று நம் தாய் நாட்டிற்க்கே போனது போல் ஒரு நிம்மதியுடன் நின்று பார்வையிட்டோம்.
இதோ நிங்களும் பார்க்கலாம்,
நான் உங்க எல்லோரையும் க்யூபெக் நகரத்திற்க்கு கூட்டிகொண்டு போகவில்லை என்ற கவலை வேண்டாம்.

மீண்டும் நிறய்ய க்யூபெக் படங்களோட அந்த நாட்டு கலாசரம்,உணவு எல்லாவற்றையும் நான் அடுத்த பதிவில் உங்களை ச்ந்திக்கிறேன்.
அதுவரைக்கும் இத படியுங்க, சொல்லுங்க.

Friday, September 17, 2010

பேப்பர் டேபிள் மேட்(Paper Mat)


இது என் மகள் அவ ஸ்கூலில் செய்தது.

Friday, September 3, 2010

ப்ளம்ஸ்,பீன்ஸ்(Plums&Beans)











இன்னும் பீன்ஸ் அறுவடை ஆகல்லை.


Monday, August 30, 2010

ப்ளாஸ்டிக் கேன்வாஸ் பூ( Plastic Canvas Flower)

I learned from this my sister.

தேவையானவை

விரும்பிய வடிவில் ப்ளாஸ்டிக் கேன்வாஸ் ஷீட் -
விரும்பிய கலரில் வூல்லன் நூல்
பெரிய கன் ஊசி

செய்முறை

ஷீட்டில் முனையில் இருந்து மேலும் கீழுமாக கோர்த்து எடுக்கவும்.
கற்பனைகேற்ப்ப செய்யலாம்.
செய்வது ரொம்ப எளிது.
நிங்களும் செய்து பாருங்க.

Wednesday, August 25, 2010

Varalakshmi nombu வரலஷ்மி நோன்பு பூஜை







இந்த நோன்பு ஆடி மாதத்தில் எல்லா தெலுகு, தமிழ் வீட்டில் கொண்டாடுவார்கள்.
மாமியா வீட்டில் கொண்டாடுவதாயிருந்தால் தலைமுறையாயி கும்பிட்டு வழிபடுவார்கள்.
இது வெள்ளிகிழமையில் கொண்டாடுவார்கள்.
சில பேர் மாமியார் வீட்டில் இல்லை என்றாலும் படம் வைத்து அஷ்டோத்திரம் செய்து
நை வேத்யம் செய்து வ்ழிபடுவது வழக்கம். அம்மனுக்கு அலங்காரம் செய்து, வீடு வாசல் எல்லாம் நன்றாக கழுவி சுத்தம் செய்து,வாழை, மஞ்சள் குலை,எல்லாம் கட்டி அலங்கரித்த மனையில் அம்மனை வைத்து வழிபடுவது வழக்கம். சிலர் வீடுகளில் படம் வைத்து, சிலர் வெள்ளி சொம்பில் அம்மன் முகம் வைத்தும், சில சுவரில் படம் வரைத்தும் செய்து வழிபடுவது வழக்கம்.
இதற்க்கு மஞ்சள் கயிரை வைத்து பூஜை செய்து கையில் கட்டுவார்கள்.
சுமங்கலிகளை அழைத்து மஞ்சள்,குங்குமம், வெற்றிலை ப்ரசாதம் குடுத்து ஆசிர்வாதம் வாங்கி கொள்வார்கள்.
இதற்க்குபழம்,பச்சரிசி இட்லி, பாயசம், வடை, கொழுக்கட்டை, கொத்து கடலை சுண்டல்,புளியோதரை, லெமன் ரைஸ் போன்றவற்றை செய்து அம்மனுக்கு நைவேத்யம் செய்து வணங்குவது வழக்கம்.

எங்க வீட்டிலும் செய்வது வழக்கம்.

Sunday, August 22, 2010

Happy Onam ஓணம் பண்டிக்கை


Wish all my readers,Facebook friends,followers

a very Happy Onam


Regards
Viji